[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

மதுபோதையில் கார் ஓட்டிய நடிகர் சக்தி: கைதாகி விடுதலை

actor-sakthi-arrested

சென்னை சூளைமேட்டில் மதுபோதையில் தாறுமாறாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக இயக்குநர் பி.வாசுவின் மகனும், நடிகருமான சக்தி கைது செய்யப்பட்டார்.

‘நினைத்தாலே இனிக்கும்’, ‘ஏதோ செய்தாய் என்னை’ உள்பட சில படங்களில் நடித்தவர் இயக்குநர் பி.வாசுவின் மகன் சக்தி. ‘பிக்பாஸ்’முதல் சீசனிலும் போட்டியாளராக பங்கேற்றிருந்தார். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பின்னரும் தற்போது புதுப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் சென்னை சூளைமேட்டில் மதுபோதையில் தாறுமாறாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக நடிகர் சக்தி கைது செய்யப்பட்டார். இளங்கோவடிகள் தெருவில் உள்ள தனது வீட்டில் இருந்து புறப்பட்ட சக்தி, சொகுசு காரை தாறுமாறாக ஓட்டி மற்றொரு கார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அவரை உடனடியாக மடக்கிப் பிடித்ததாகச் சொல்லப்படுகிறது. இதுகுறித்து விபத்துக்குள்ளான காரின் உரிமையாளர் செல்வம் அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதன் பே‌ரில் சக்தியை கைது செய்த காவல்துறையினர் பின்னர் ஜாமீனில்‌ விடுவித்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close