[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS வரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்
  • BREAKING-NEWS ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு

மன்மோகன் சிங் V/S  நரேந்திர மோடி: பாலிவுட் மோதல்

this-is-how-vivek-oberoi-looks-as-pm-narendra-modi-in-his-biopic

பிரதமர் மோடியின் பயோபிக் திரைப்படமான ‘பிஎம் நரேந்திர மோடி’ யின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது

பாலிவுட்டில் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் அதிகம் எடுக்கப்படுகின்றன. கற்பனைக்கதையை உருவாக்கி எடுக்கப்படும் திரைப்படங்களை காட்டிலும் வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் அதிக எதிர்பார்ப்பையும், முக்கிய பதிவாகவும் அமைகின்றன. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி  ‘தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்’  என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தத் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், சமீபத்தில் சில சர்ச்சைகளை அது சந்தித்தது. 

இந்நிலையில் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை ‘பிஎம் நரேந்திர மோடி’ என்ற பெயரில் இயக்குநர் ஓமங் குமார் இயக்க உள்ளார். குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கியவர் ஓமங் குமார். இதன்படி நரேந்திர மோடியின் திரைப்படத்தில் மோடியின் கதாபாத்திரத்தில் இந்தி நடிகர் விவேக் ஓபராய் நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. 

திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று பிஎம் நரேந்திர மோடி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. காவி நிற ஜிப்பாவை அணிந்தபடி நரேந்திர மோடி நிற்பது போலவும், பின்னால் தேசியக்கொடி பறப்பது போலவும் இந்த பர்ஸ்ட் லுக் அமைந்துள்ளது. 

இந்த பர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. மோடியின் உருவத்திற்கு விவேக் ஓபராய் சரியாக பொறுந்தி உள்ளதாக பலரும், இந்த போஸ்டரில் உள்ளவர் மோடி போலவும் இல்லை, விவேக் ஓபராய் போலவும் இல்லை எனவும் பலர் விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close