[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு
  • BREAKING-NEWS சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS கர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் எம்எல்ஏக்களை கடத்தியதால்தான் பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு பன்றிக்காய்ச்சல் வந்தது - பி.கே.ஹரிபிரசாத்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்

கருப்பு நயன்தாரா v/S சிகப்பு நயன்தாரா கலக்கும் ‘ஐரா’ டீசர் 

nayanthara-has-tried-something-new-in-terms-of-makeup-and-performance-in-airaa

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஐரா’ பட டீசர் வெளியாகியுள்ளது. 


நயன்தாராவின் நடிப்பில் விரைவில் திரைக்கு வர உள்ள திரைப்படம் ‘ஐரா’. இந்தப் படத்தில் நயன் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். இந்தப் படம் பெண் பிள்ளைகளின் சிசுக் கொலையை முன்வைத்து எடுக்கப்பட்டுள்ள பேய் படம் எனத் தெரிய வந்துள்ளது. இதனை கேஜேஆர் ஸ்டுடியோ தயாரிப்பில் கோத்தபாடி ராஜேஸ் மற்றும் டிரெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். 
 
‘லட்சுமி’,‘மா’ ஆகிய இரண்டு குறும்படங்களை இயக்கிவிட்டு அதன் பின் ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தை இயக்கிய சர்ஜூன் இந்த ‘ஐரா’வையும் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் டீசர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி டீசர் வெளியாகியுள்ளது.

டீசனின் தொடக்கத்திலேயே “மறுபடியும் பொட்டபுள்ள பொறந்திருக்குய்யா..” என்றது, என்னது “மறுபடியுமா” என ஒரு பெண் அலறல் குரலில் பேசுகிறார். ஆக, இந்தக் கதை சிசுக் கொலையை மையமாக வைத்து உருவானதற்கான ஒரு முடிச்சு அவிழ்ந்துள்ளது. அதோடு நயன் மேக் அப் இல்லாமல் கருத்த முகத்தில் இதில் இரண்டாவது வேடத்தில் நடித்துள்ளதும் தெரிய வந்துள்ளது. கரிக்கட்டையை போல அவர் அடையாளமே தெரியாத அளவுக்கு இருண்டு போய் காட்சியளிக்கிறார். மேலும் இந்தக் கருப்பு நயன்தாரா ஒரு ஆவி பாத்திரமாக இருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால் இதனை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதிப்படுத்தவில்லை.  

இந்தப் படத்தில் நயன்தாராவுடன் கலையரசன், யோகிபாபு, ஜெயபிரகாஷ், லீலாவதி உள்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கேஎஸ் சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார்.   

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close