[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்
  • BREAKING-NEWS தென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது

புத்தாண்டு முதல் ஹாட் நியூஸ் ஆன விஜய் மகன் சஞ்சய் 

actor-vijay-son-sanjay-s-first-short-film-junction

விஜய் மகனின் அடுத்த இலக்கு என்ன என்பது குறித்து சமூக வலைத்தளங்களில் சுவாரஸ்யமான விவாதம் சென்று கொண்டுள்ளது.

விஜய் மகன்தான் புத்தாண்டில் இருந்து ஹாட் நியூஸ். அவர் எடுத்த ‘ஜங்சன்’ குறும்படத்தை இதுவரை 1,354,800 பார்வையாளர்கள் கண்டுகளித்துள்ளனர். புத்தாண்டு அன்று வெளியான இந்தக் குறும்படத்தின் வெப்பமே இன்னும் குறையவில்லை. அதற்குள் விஜய் மகன் ஜாசன் சஞ்சய் எடுத்த ஒரு வீடியோ பேட்டி ஒன்றும் பார்வையாளர்களின் கவனத்திற்கு விடப்பட்டது. 

‘நோட்டா’பட இயக்குநர் ஆனந்த் ஷங்கரை எடுத்த பேட்டி எடுப்பதற்கு முன்பே தனது மொபைல் போனில் அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை முன் தயாரிப்புடன் குறித்து எடுத்து வந்துள்ளார் சஞ்சய். ஆக, ஒரு அஃமார்க் ‘விஜே’போல வேலை பார்த்திருக்கிறார் சஞ்சய்.  

சஞ்சய்க்கு ஆன் ஸ்கிரீன் மீதுள்ள ஈடுபாட்டை விட ஆஃப் ஸ்கிரீன் மேல்தான் அதிக ஆர்வம் என முன்பே சில செய்திகள் வெளியாகின. அதனை உறுதிப்படுத்தும் விதத்தில் ‘ஜங்சன்’ குறும்பம் இருந்தது. அந்தக் குறுபடத்தை அவரே இயக்கி அவரே நடித்தும் உள்ளதால் அவருக்கு ஆன் ஸ்கிரீன் மீதும் ஆசை அதிகரித்துள்ளதாக விஜய்யின் நெருங்கிய வட்டம் தகவல் தருகிறது.

இந்தக் குறும்படம் முடியும் போது இளம் தலைமுறையை சுட்டுவதை போல விஜய் மகனின் பெயர் சுருக்கமாக இடம் பெறுகிறது. அதாவது ‘ஜெஎஸ்ஜெ’எனப் பேடப்பட்டுள்ளது. அப்படி என்றால் ஜாசன் சஞ்சய் ஜோசப் என்பது பொருள். அப்பா பெயரில் வரும் ஜோசப் விஜய் பின்னொட்டாக புகுந்திருக்கிறார்.

அது சரி, இந்தக் குறும்படம் என்ன சொல்கிறது. இது விஜய் மகன் எடுத்த குறும்படம்தான் என்றாலும் முழுமையான தமிழ்ப் படமாக இதனை அவர் உருவாக்கவில்லை. லண்டனில் வாழும் ஒரு தமிழ்க் குடும்பம் இதனை பார்த்தாலும் அவர்களும் தங்களின் படம்போலவே உணர்வார்கள். அதற்கு காரணம், ஆங்கிலம். இந்தப் படத்தில் ஆங்கிலம் அதிகம். தமிழ் இரண்டு மூன்று  வார்த்தையாக மட்டுமே வந்து போகிறது. அதேபோல் விஜய் மகனும் மிக சரளமாக ஆங்கிலம் பேசுகிறார். 

இந்தப் படம் இளம் தலைமுறையினர் சந்திக்கும் ஈவ் டீசிங் பிரச்னையை முதன்மையாக முன் வைக்கிறது. ஒரு அறையில் சக மாணவர்கள் வீடியோ கேம் விளையாடி வருகிறார்கள். அப்போது அந்த கேம் தவறாக முடிகிறது. அந்தத் தோல்வியை தாங்க முடியாமல் ஒரு மாணவன் சட்டையை கழற்றி போட்டு ஆடுகிறார். 

இன்னொருவர் சோகமாக இருக்கிறார். அருகில் விஜய் மகன் சஞ்சய் சோகமாக உட்கார்ந்திருக்கிறார். ஏன்? என்ன ஆயிற்று? இங்கே தொடங்குகிறது படம். அவர், எங்கு சென்றாலும் ஈவ் டீசிங் என வேதனை கொள்கிறார். சஞ்சய்யை ஈவ் டீசிங்  செய்தவனை தண்டிப்பதற்காக பாக்கெட் கத்தியுடன் இரவில் போகிறார். அந்த வழியே சஞ்சய் எதிர்பார்த்த மாணவன் வருகிறார். அவனை கத்தியால் குத்த போகும் போது என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் முடிவு. இறுதியில் சஞ்சய் தப்பினாரா? இல்லையா? எனப் போகிறது படம். 

இந்தப் படம் மிக நேர்த்தியான லைடிங் செய்யப்பட்டு மிக நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கேமிராவும் மிக சிறப்பாக உள்ளது. இந்தப் படம் முழுக்க முழுக்க இரவில் எடுக்கப்பட்டுள்ளதால் விளக்கு வெளிச்சம் என்பதும் இருட்டு என்பதும் படத்தில் சரி பங்காக வருகிறது. அதுவும் மிக அழகாக வருகிறது. சஞ்சய் வெளிநாட்டில் சினிமா கற்றவர். அவர் முறைப்படி வித்தைக் கற்றவர் என்பதால் தரம் தாராளமான கைவர பெற்றுள்ளது.  

இந்த ஆண்டின் தொடக்கமே சஞ்சய்க்கு பெரிய வரவேற்புதான். இவர் ஆனந்த் ஷங்கரை எடுத்த பேட்டி முழுவதும் ஆங்கிலத்தில்தான் உள்ளது. அதேபோல் குறும்படமும் ஆங்கிலத்திலேயே உள்ளது. மிக எளிதாக படத்தில் கதாபாத்திரங்கள் அனைவரும் ‘எஃப்’ வார்த்தைகளை உபயோகிக்கின்றனர். அது மிக சகஜமாக வெளிப்படுகிறது.

சஞ்சய் எடுத்த பேட்டிகூட இப்போது எடுத்த பேட்டியை போல தெரியவில்லை. அதில் வரும் கேள்விகள் இயக்குநரின் பழைய படத்தை மட்டுமே கேள்விகளாக முன்வைக்கின்றன. நிச்சயம் இது பழைய பதிவாக இருக்கலாம். எது எப்படியோ? விஜய் மகன் விரைவில் அதிகாரப்பூர்வமாக தமிழ் சினிமாவிற்குள் எண்ட்ரி கொடுப்பார் என்பது புரிகிறது. அதற்கான முன்னோட்டமாகவே இந்த இரு விஷயங்களும் அடுத்தடுத்து நடந்துள்ளன. 

முன்பே அப்பாவுடன் ‘வேட்டைக்காரன்’ படத்தில் ‘நான் அடிச்சா தாங்கமாட்ட’ பாட்டில் இறங்கி ஆடிய சஞ்சய், இந்த ஆண்டில் எதையோ பெரியதாக செய்ய திட்டமிட்டு வருகிறார் என்பது மட்டும் இப்போதைக்குப் புரிகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close