[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு
  • BREAKING-NEWS சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS கர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் எம்எல்ஏக்களை கடத்தியதால்தான் பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு பன்றிக்காய்ச்சல் வந்தது - பி.கே.ஹரிபிரசாத்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்

2018-ல் திருமணம் செய்து கொண்ட திரை பிரபலங்கள்

from-shriya-saran-to-bhavana-kollywood-weddings-in-2018

2018 ஆம் ஆண்டு சில கோலிவுட் நடிகர் நடிகைகளுக்கு அற்புதமான ஆண்டாக அமைந்துள்ளது. ஏனெனில் ஸ்ரேயா முதல் பாவனா வரை பலர் இந்த ஆண்டில்தான் தன் மனதுக்கு பிடித்தவர்களை திருமணம் செய்து கொண்டுள்ளனர். அதில் சில பிரபலங்களை காண்போம்.

ஸ்ரேயா 

தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஸ்ரேயா. அதன் பின்னர் மழை, திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி, அழகிய தமிழ்மகன், கந்தசாமி, குட்டி, புலி என பல திரைப்படங்களில் நடித்துள்ளார் ஸ்ரேயா. தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்த ஸ்ரேயா 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மும்பையில் ரஷ்யாவை சேர்ந்த தொழில் அதிபரும், டென்னீஸ் வீரருமான ஆண்ட்ரே கோஷ்சீவை இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.

பாவனா 

பாவனா தமிழ், மளையாளம், கன்னடம் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழில் சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.  வெயில் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இவருக்கு பாரட்டுகள் குவிந்தன. தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல் ஆகிய திரைப்படங்கள் இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்று தந்தது. கன்னட தயாரிப்பாளர் நவீனை ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்த நடிகை பாவனா கேரள மாநிலம் திருச்சூரில் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டார்.

ரமேஷ் திலக் 

தமிழில் சூது கவ்வும், ஆரஞ்சு மிட்டாய், காக்கா முட்டை, ஒருநாள் கூத்து, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் உள்ளிட்ட பல படங்களில் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்தவர் ரமேஷ் திலக். இவரும் சண்டை இயக்குனர் ராம்போ ராஜ்குமார் மகளுமான நவலட்சுமியும் காதலித்து வந்தனர். இதையடுத்து 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை பெசன்ட் நகரில் உள்ள முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.

கதிர்

மதயானைக்கூட்டம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் கதிர். அதன்பின்னர், கிருமி, என்னோடு விளையாடு, விக்ரம் வேதா, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரபல தொழில் அதிபரின் மகளான சஞ்சனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் காதல் திருமணம் அல்ல. பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்.

சுவாதி ரெட்டி

தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்த சுவாதி, தமிழில் சுப்பிரமணியபுரம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார். தொடர்ந்து போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, யட்சன், யாக்கை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ள சுவாதி மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் விமானியாக பணியாற்றும் விகாஸ் என்பவரை காதலித்து 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொண்டார். 

ராஜ்குமார் பெரியசாமி

கெளதம் கார்த்திக் நடித்த ரங்கூன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜ்குமார் பெரியசாமி. இவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார். ராஜ்குமார் பெரியசாமி ரங்கூன் படத்தில் தன்னுடன் இணை இயக்குநராக பணியாற்றிய ஜஸ்வினி என்பவரை 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்துகொண்டார்.

சாந்தினி தமிழரசன் 

நடிகை சாந்தினி தமிழரசன், பாக்கியராஜ் மகன் சாந்தனு நடிப்பில் வெளியான ‘சித்து பிளஸ் டூ’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின்னர், வில் அம்பு, பில்லா பாண்டி, ராஜா ரங்குஸ்கி, கட்டப்பாவ காணோம், பலூன், மன்னர் வகையறா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள சாந்தினி தமிழரசன், கடந்த 9 வருடங்களாக காதலித்து வந்த நடன இயக்குநர் நந்தாவை கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

சுஜா வருணி

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சுஜா வருணி நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் சிவகுமாரை நீண்ட நாட்களாக காதலித்து கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தில் நடிகர் சிவக்குமார், நடிகைகள் ராதிகா சரத்குமார், ஸ்ரீ ப்ரியா, சுஹாசினி மணிரத்னம், விஜி சந்திரசேகர், பிக் பாஸ் பிரபலம் கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஹரிஷ் உத்தமன்

வில்லன், அண்ணன், நண்பன் என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் ஹரிஷ் உத்தமன். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில் தனி ஒருவன், பைரவா, றெக்க, டோரா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த நவம்பர் மாதம் அமிர்தா என்ற மும்பை மேக் அப் கலைஞரை காதலித்து குருவாயூர் கோயிலில் திருமணம் செய்து கொண்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close