[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்
  • BREAKING-NEWS சென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS குஜராத்: அகமதாபாத்தில் வல்லபாய் படேல் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் திறப்பு
  • BREAKING-NEWS பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது
  • BREAKING-NEWS காணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்
  • BREAKING-NEWS சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்

சைவத்துக்கு மாறிய யோகி பாபுவின் ’தர்ம பிரபு’ டீம்!

yogi-babu-and-team-go-veg-for-film-on-yaman

காமெடி நடிகர் யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் ’தர்மபிரபு’ படக்குழு சைவத்துக்கு மாறியுள்ளது. 

காமெடி நடிகர் யோகி பாபு, ‘தர்ம பிரபு’ என்ற படத்தில் இப்போது நடித்து வருகிறார். ஸ்ரீவாரி பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பி.ரங்கநாதன் தயாரிக்கும் இந்தப்படத்தை முத்துகுமரன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே விமல் நடித்து வரும் ‘கன்னிராசி’ படத்தை இயக்கியவர். அந்தப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக இதை இயக்குகிறார். ஒளிப்பதிவு, மகேஸ் முத்துசாமி. இசை, ஜஸ்டின் பிரபாகரன். 

எமலோகத்தில் எமன் பதவி முடிவடையும் நிலையில், புதிய எமனை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்கிறது. வாரிசு அடிப்படையில் யோகிபாபுவும், சித்ரகுப்தனாக பதவி வகித்துவரும் கருணாகரன் பதவி அடிப்படையிலும் எமனுக்கு போட்டி போடுகிறார்கள். இதில் யார் எமன் பதவியை தட்டி செல்கிறார்கள், தன் தகுதியை எப்படி நிரூபித்து கொள்ளப் போகிறார்கள் என்கிற காமெடி கதை. சமீபத்தில் தன் உடல் மொழி யாலும், வசன உச்சரிப்பாலும் அனைவரையும் தன் ரசிகர்களாக மாற்றி கொண்டிருப்பவர் யோகிபாபு. அவர் எமன் கேரக்டரில் நடிக்கிறார். 

படத்திற்காக எமலோகம் செட் பல கோடி ரூபாய் செலவில் அமைத்து ஷூட்டிங் நடந்து வருகிறது. இதற்கிடையே படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்து முடியும் வரை சைவ உணவையே பயன்படுத்த சாப்பிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இதுபற்றி படக்குழு கூறும்போது, ‘’ஷூட்டிங் தொடங்குவதற்கு முன், கும்பகோணத்தில் உள்ள எமதர்மராஜா கோயிலுக்கு சென்று வந்தோம். பிறகு வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கும் டீமோடு சென்று வழிபட்டோம். பின் இரண்டு வாரங்களுக்கு முன் ஷூட்டிங் தொடங்கியது.

அப்போதிருந்து இப்போது வரை, அசைவ உணவைத் தவிர்த்து விட்டோம். சைவ உணவையே படக்குழுவினர் சாப்பிட்டு வருகின்றனர். இன்னும் 45 நாள் படப்பிடிப்பு இருக்கிறது. அதுவரை சைவத்தை தொடர முடிவு செய்துள்ளோம்’’ என்று தெரிவித்தது.  

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close