[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது
  • BREAKING-NEWS காணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்
  • BREAKING-NEWS சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்

பிரபல இயக்குனர் மிருணாள் சென் காலமானார்

veteran-filmmaker-mrinal-sen-dies-at-95

பிரபல இயக்குனர் மிருணாள் சென், கொல்கத்தாவில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 95.

இந்திய சினிமாவின் பிதாமகன்களில் ஒருவராகக் கருதப்படுபவர் மிருணாள் சென். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அவர் தனது திரைப்படங்களின் மூலம் புதுமையான சமூக கருத்துக்களை விதைத்தவர். இந்திய திரைப்படங்களை உலகத் தரத்துக்கு உயர்த்திய இயக்குநர்களில் ஒருவர் என்று கூறப்படும் அவர், இந்தி, ஒடிசா, வங்க மொழிகளில் சுமார் 30 திரைப்படங்கள் இயக்கியுள்ளார். கடந்த சில நாட்களாக, வயது முதிர்வு காரணமாக உடல் நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள தனது வீட்டில் இன்று காலை காலமானார். 

மிருணாள் சென், இயக்கிய முதல்படமான, ‘ராத் போர்’  வெற்றியடையவில்லை. அடுத்து, ‘நீர் ஆகாஷெர் நீச்சே’ (நீல வானத்தின் கீழ்) என்ற படத்தை இயக்கினார். இப்படம் இவருக்கு இந்திய அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தது. இவர் இயக்கிய, பைஷே ஷ்ரவான், புவன் ஷோம், அகா லெர் சந்தானே ஆகிய படங்கள் அவருக்கு பாராட்டுகளை பெற்றுத் தந்தன. இவரின் பல படங்கள் தேசிய விருதுகளை பெற்றுள்ளன. கேன்ஸ், பெர்லின், வெனிஸ், மாஸ்கோ, சிகாகோ, கெய்ரோ உள்ளிட்ட உலகத் திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு, சர்வதேச விருதுகளை யும்  வென்றுள்ளன.

இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது, பத்மபூஷண் உட்பட பல விருதுகளையும் சென் பெற்றுள்ளார். இவரது பல திரைப்படங்கள் கல்கத்தா நகரை கதைக்களமாகக் கொண்டது. இவரது படங்களில் கல்கத்தா நகரமும் ஒரு கதாபாத்திரமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய தர வர்க்க வாழ்க்கை முறையை, யதார்த்தமான பல்வேறு படைப்புகளின் மூலம் இந்திய சினிமாவிற்கு வழங் கியவர் இவர்.

இவரது மறைவுக்கு பெங்கால், இந்தி திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யச்சூரியும் இரங்கல் தெரிவித்துள்ளார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close