[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு
  • BREAKING-NEWS சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS கர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் எம்எல்ஏக்களை கடத்தியதால்தான் பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு பன்றிக்காய்ச்சல் வந்தது - பி.கே.ஹரிபிரசாத்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்

நான் சட்டத்தை மதிப்பவன்: வங்கி கணக்கு முடக்கம் பற்றி மகேஷ் பாபு விளக்கம்

no-undisputed-tax-payable-am-a-law-abiding-citizen-mahesh-babu

தான் சட்டத்தை மதிப்பவன் என்றும் வரி பாக்கி எதுவும் வைக்கவில்லை என்றும் நடிகர் மகேஷ்பாபு விளக்கம் அளித்துள்ளார். 

தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோ மகேஷ்பாபு. கடந்த 2007-08-ம் ஆண்டுகளில் விளம்பர நிறுவன தூதுவராக இருந்து கிடைத்த வருமா னத்தின் சேவை வரியாக, ரூ.18.5 லட்சத்தை செலுத்தவில்லை என்று ஐதராபாத்தில் உள்ள ஜி.எஸ்.டி ஆணையகம் அவரின் வங்கிக் கணக்கு களை முடக்கியது. வட்டி, அபராதம் உள்ளிட்டவை உட்பட அவர் ரூ.73.5 லட்சம் வரி பாக்கி வைத்துள்ளதாகக் கூறப்பட்டது.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தான் சட்டத்தை மதிப்பவர் என்றும் வரி பாக்கி வைக்கவில்லை என்றும் விளக்கம் கொடுத்திருக்கிறார் மகேஷ்பாபு. 

இது தொடர்பாக அவரது வழக்கறிஞர் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் ’ஜி.எஸ்.டி ஆணையகம் அறிக்கையின்படி கடந்த 2007-08-ம் ஆண்டில் பிராண்ட் அம்பாசிடர் சேவைக்கான ரூ.18.5 லட்சம் வரியை செலுத்தவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது. அப்போதைய காலகட்டத்தில் விளம்பர தூதர் சேவைக்கு வரி விதிக்கப்படவில்லை. 2010-ம் ஆண்டு ஜூலையில் இருந்துதான் அந்த சேவைக்கு வரி விதிக்கப்பட்டது. ஆனால் ஜி.எஸ்.டி ஆணையகம் எந்த முன் அறிவிப்பும் இன்றி எனது வங்கிக் கணக்கை முடக்கி இருக்கிறது. நடிகர் மகேஷ் பாபு, சட்டத்தை மதிக்கும் குடிமகன். அவர் வரி செலுத்தாமல் இருந்ததில்லை’’ என்று அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close