[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

மூடப்படுகிறது அபிராமி மெகா மால் ! இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு திறக்கப்படும்

abhirami-mega-mall-will-close-soon

அபிராமி மெகா மால் புத்துயிர் பெறுவதையொட்டி வருகி பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அபிராமி மெகா மால் மற்றும் அபிராமி திரையரங்குகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அபிராமி ராமநாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ கடந்த 2002-ஆம் ஆண்டு அபிராமி மெகா மால் அமைக்கப்பட்டது. அபிராமி மெகா மாலில் 7 நட்சத்திர வசதிகளுடன் திரையரங்குகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. தற்போது 1000 இருக்கைகளுடன கூடிய திரையரங்குகளுக்கு வாய்ப்புகள் இல்லை.

எனவே அபிராமி மெகா மால் மற்றும் அபிராமி திரையரங்குகள் வருகிற பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டு மீண்டும் புதிய கட்டிடம் ஆரம்பிக்கப்பட உள்ளது. இதில் முதல் 3 மாடிகளில் திரையரங்கங்கள் உள்ளிட்ட வணிக வளாகம் இருக்கும். அதன்மேல் 14 மாடிகளில் அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டிடங்கள் அமைக்கப்பட உள்ளது. இந்தியாவில் இல்லாத பல புதுமைகளுடன் திரையங்குகள் அமைக்கப்பட உள்ளன. சினிமாக் கருவிகளே இல்லாத சினிமா இந்த திரையரங்கில் திரையிடும் வகையில் அமைக்கப்பட இருக்கிறது. புது வளாகம் 24 மாதங்களில் திறக்கப் உள்ளது. அத்துடன் இக்கட்டிடத்தில் சைவப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட உள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close