[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது
  • BREAKING-NEWS காணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்
  • BREAKING-NEWS சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்

‘பேட்ட’ டிரெய்லர் : பழைய ரஜினியின் மாஸூம் விஜய் சேதுபதியின் சேஸூம்...

petta-trailer-review-rajini-mass-and-vijay-sethupathy-chase

பேட்ட படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. டிரைலர் தொடங்கும் போதே விஜய் சேதுபதியின் குரலில், “20 பேர அனுப்பி வச்சேன். எல்லாரையும் அடித்து துவச்சுட்டான்” என ஒலிக்கிறது. அந்தக் குரலே பேட்ட ஒரு ஆக்‌ஷன் மிகுந்த படம் என்பதை உறுதிப்படுகிறது. அடுத்தக் குரல் ‘யாருடா அவன்’ என கேள்வியாக எழும்ப, “பேரு காளி. வேற எந்த டீடெயிலும் தெரியல” என பாபி சிம்ஹா சலிப்புடன் கூறுகிறார். அந்த இடத்தில் ரஜினிக்கான மாஸை காட்ட முயன்றிருக்கிறார் அவரது ரசிகரும், படத்தின் இயக்குனருமான கார்த்திக் சுப்புராஜ்.

ஏற்கெனவே வெளியான பேட்ட டீஸரில் காலேஜ் பசங்களோடு ரஜினி ஆட்டம் போட்டிருந்தார். அத்துடன் கையில் சாப்பிடும் தின்பண்டங்களை ஏந்திய தட்டுடன் காட்சியளித்திருந்திருப்பார். இதனால் அவர் காலேஜ் கேண்டீன் மாஸ்டராக இருக்கலாம் எனக்கூ றப்பட்டது. இந்நிலையில் பேட்ட டிரைலரில் அவர் ஹாஸ்டல் வார்டன் என்பதை உறுதி செய்துள்ளனர்.

இதற்கிடையே ரஜினி மாஸ் தொடர்பாக பேசும் வில்லனின் ஆல் ஒருவர், “ஒருத்தன் உட்காந்திருக்கும் தினுசை வச்சே சொல்லிடுவேன் இவன் ரத்தம் பாத்த பயலா இல்லையானு. இவன பார்த்தா சாதாரணமா தெரியல” என்கிறார். இதனால் ஃப்ளாஷ் பேக் சீனில் வரும் ரஜினி முரட்டுப் சிங்கிளாக இருப்பார் என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளனர். 

அடுத்தக் காட்சியில் ‘ஒருத்தண்ணே.., யாரோ ஹாஸ்டல் வார்டனாம். மரண காட்டு காட்டிட்டாண்ணே” என வில்லனிடம் சென்று ரஜினியிடம் அடிபட்டவர்கள் முறையிடுகின்றார்கள். அங்கே தொடங்குகிறது ரஜினிக்கும் வில்லன் கேங்குக்கும் இடையேயான மோதல். இந்தக் காட்சி வருவதற்கு முன்பு வரை ரஜினி குறும்புத் தனத்துடன், சேட்டைகளை செய்தபடி, காலேஜ் பசங்களுக்கு மத்தியில் அப்பாவி மற்றும் சாதுவான ஜாலி வார்டனாக இருந்திருக்கலாம். அதன்பின்னர் ஒரு கட்டத்தில் பாபி சிம்ஹா ஆட்களை கூட்டி வந்து காலேஜ் பசங்களை அடிக்க, அப்போது குறுக்கிடும் ரஜினி “பாட்ஷா” போல ஒரு சண்டை போட்டிருப்பார். 

இதன்பின்னர் தொடர்ந்து வில்லன் ஆட்கள் மற்றும் ரஜினிக்கு இடையே மோதல்கள் வெடித்திருக்கும். இதற்கிடையே சசிகுமாருடன் இணைந்து சிம்ரனுடன் சேர்ந்து ரஜினி காதல் சீன்களில் வலம் வந்திருப்பார் எனத் தோன்றுகிறது. அடுத்து ரஜினி பேசும் “சிறப்பான சம்பவங்களை இனிமே தான் பார்க்கப்போற” என்ற வசனம் வரும் காட்சி இடைவேளையாக இருக்கலாம். அதன்பின்னர் படத்தின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பான அடிதடிகளுடன் செல்லும் என்பதை அங்கே மறைமுகமாக குறிப்பிட்டிருக்கலாம். ஆனால் ரஜினிக்கும், விஜய் சேதுபதிக்கும் ஏற்கெனவே முன்பகை இருந்ததுபோல, ஒரு கட்டத்தில் தோன்றுகிறது. அல்லது விஜய் சேதுபதி தனக்கு ஏற்பட்ட அவமானத்தால் ரஜினியை கொல்ல முயற்சித்திருக்கலாம். எது எப்படியோ கார்த்திக் சுப்புராஜ் நினைத்தது போல, ரஜினியை முழு மாஸாக காட்டியுள்ளார். இது ரஜினி ரசிகர்களுக்கு பொங்கலன்று சிறந்த விருந்தாக அமையும் என்பதை, ‘ஸ்விட் சாப்பிடப்போறோம்’ என ரஜினியே கூறிவிட்டார். 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close