[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

இணையத்தில் கசிந்த காட்சிகள் : முன்கூட்டியே வெளியான ‘பேட்ட’ டிரைலர்

petta-trailer-released-by-movie-team-some-scenes-leaked-in-net

ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

‘2.0’ படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட’. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இது பொங்கல் அன்று திரைக்கு வரவுள்ளது. இதில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன், த்ரிஷா நடித்துள்ளனர். சசிக்குமார், விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, நவாஜுதீன் சித்திக் என நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளனர். ‘பேட்ட’ படத்தின் சூட்டிங் வேலைகள் முடிந்து போஸ்ட் புரொடெக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள ‘மரண மாஸ்’ என்ற பாடலை கடந்த மாதம் 3-ம் தேதி படக்குழுவினர் வெளியிட்டனர். இதனையடுத்து படத்தின் டீஸர் ரஜினி பிறந்தநாளில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. ‘பேட்ட’ படத்தின் இசைவெளியீட்டு விழா  சில வாரங்கள் முன் சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில் ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர். இந்நிலையில் பேட்ட படத்தின் ட்ரெய்லர் இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என நேற்று படக்குழு அறிவித்திருந்தது.

இதனால் இன்று காலை முதலே ரஜினி ரசிகர்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பேட்ட ட்ரெய்லர் என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கி வந்தனர். இந்நிலையில் பேட்ட பட ட்ரெய்லரின் சில காட்சிகள் இணையத்தில் கசிந்தன. இதனால் 11 மணிக்கு முன்னதாக 10.25 மணிக்கே பேட்ட ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close