[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

'விஸ்வாசம்' டீஸர் எப்போது ?

viswasam-teaser-is-likely-to-release-on-the-1st-of-january

புத்தாண்டு தினமான ஜனவரி 1 ஆம் தேதி விஸ்வாசம் படத்தின் டீசர் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

நடிகர் அஜித்தை வைத்து இயக்குநர் சிவா ‘வீரம்’,‘வேதாளம்’,‘விவேகம்’ உள்ளிட்ட படங்களை இயக்கினார். அவர் அஜித்துடன் 4-வது முறையாக கூட்டணி சேர்ந்த திரைப்படம் ‘விஸ்வாசம்’. 4 வது முறையும் கூட்டணி சேர்ந்ததால் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்தப் படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் ‘விஸ்வாசம்’ படத்தின் மோஷன் போஸ்டரை நவம்பர் 27 ஆம் தேதி படக்குழுவினர் வெளியிட்டனர். அதன் பின்னர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. 

இந்நிலையில் சமீபத்தில் பாடல்கள் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றுள்ளது.  இதற்கிடையே ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள இந்தப் படத்தை பல்வேறு நாடுகளில் வெளியிடும் முயற்சியில் தயாரிப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி முதன்முறையாக அஜீத் படம் ரஷ்யாவில் வெளியாகிறது. அங்கு, ரஜினியின் ’கபாலி’, ’2.0’, விஜய்யின் ’சர்கார்’ படங்கள் ஏற்கெனவே ரிலீஸ் ஆகியுள்ளன. இந்நிலையில் ’2.0’ படத்தை ரஷ்யாவில் வெளியிட்ட பிரசாந்த், ’விஸ்வாசம்’ படத்தை ரஷ்யாவிலும் உக்ரைனிலும் வெளியிடுகிறார்.

ரிலீஸ் தொடர்பான வேலைகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் புத்தாண்டு தினமான ஜனவரி 1ம் தேதி படத்தின் டீசர் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தணிக்கைக்குச் சென்ற விஸ்வாசம் திரைப்படம் எந்த வித கத்தரிப்பும் இன்றி யு சான்றிதழ் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close