[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS வரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்
  • BREAKING-NEWS ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு

நயன்தாராவுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய விக்னேஷ் சிவன் 

vignesh-shiva-who-celebrated-christmas-with-nayantara

நடிகை நயன்தாரா உடன் விக்னேஷ் சிவன் கிறிஸ்துமஸ் கொண்டாடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. 

கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த நயன்தாராவின் இயற்பெயர் டயானா மரியம் குரியன். சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாக உள்ள ‘விஸ்வாசம்’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் நயன் தாரா. இந்தப்படம் பொங்கல் அன்று திரைக்கு வருகிறது.

இதையடுத்து‘கொலையுதிர் காலம்’,‘ஐரா’,‘சை ரா நரசிம்ம ரெட்டி’,‘லவ் ஆக்‌ஷன் ட்ராமா’ என பல படங்கள் நயன்தாரா நடிப்பில் திரைக்கு வர காத்திருக்கின்றன. மேலும், எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்து வருகிறார் நயன்தாரா.

இதனிடையே தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக வலம் வரும் நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். சென்னையில் வசித்து வரும் இவர்கள், ஒவ்வொரு விழாவின் போதும் இருவரும் புகைப்படங்கள் எடுத்து வலைத்தளங்களில் வைரலாக்கி விடுவது வழக்கம்.

அந்த வகையில், இவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் நயன் தாரா தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவிக்கும் வகையில் அவர்கள் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close