[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS வரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்
  • BREAKING-NEWS ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு

‘யு’ சான்றிதழை பெற்றது அஜித்தின் ‘விஸ்வாசம்’

censor-board-granted-u-certificate-for-viswasam

இயக்குநர் சிவாவுடன் 4 முறையாக கூட்டணி சேர்ந்து அஜித் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘விஸ்வாசம்’ திரைப்படத்திற்கு தணிக்கைக் குழு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

நடிகர் அஜித்தை வைத்து இயக்குநர் சிவா ‘வீரம்’,‘வேதாளம்’,‘விவேகம்’ உள்ளிட்ட படங்களை தொடர்ந்து அஜித்துடன் 4-வது முறையாக கூட்டணி சேர்ந்துள்ள திரைப்படம் ‘விஸ்வாசம்’.

இவர்கள் 4 வது முறையும் கூட்டணி சேர்ந்ததால் அதிக எதிர்பார்ப்பு உருவாகியது. அஜித் இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் இந்தப் படத்தில் நிரஞ்சனா என்ற கதாப்பாத்திரத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ளார். மதுரை மற்றும் தேனியைப் பின்னணியாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.

இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ‘விஸ்வாசம்’ படத்தின் மோஷன் போஸ்டரை நவம்பர் 27 ஆம் தேதி படக்குழுவினர் வெளியிட்டனர். எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென்று மோஷன் போஸ்டர் விடப்பட்டாலும் வழக்கம்போல் அஜித் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

இதைத்தொடர்ந்து அவ்வப்போது படப்பிடிப்பு புகைப்படங்கள், அஜித்தின் புகைப்படங்கள் ஆகியவை இணையத்தில் லீக் ஆகி ட்ரெண்ட் ஆகின. படத்தில் அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு ‘விஸ்வாசம்’ படத்தின் பாடல்களை வெளியிட்டு விருந்தளித்தது படக்குழு. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

இந்நிலையில் படத்தின் டீசர் மற்றும் டிரைலருக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் அஜித்தின் ‘விஸ்வாசம்’திரைப்படத்திற்கு தணிக்கைக் குழு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close