[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது
  • BREAKING-NEWS வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்
  • BREAKING-NEWS மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை
  • BREAKING-NEWS சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை
  • BREAKING-NEWS தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு
  • BREAKING-NEWS தமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்

அஜித்துடன் இணைகிறார் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன்?

kalyani-priyadarshan-in-ajith-s-pink-remake

போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்து வரும் படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்தியில் 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பிங்க்’. இதனை அனிருத் ராய் செளத்ரி இயக்கி இருந்தார். மூன்று பெண்களை மையமாக வைத்த இந்தக் கதையில் நடிகை டாப்சி நடித்திருந்தார். மிக முக்கியமான பாத்திரமான வழக்கறிஞர் தோற்றத்தில் நடிகர் அமிதாப் பச்சன் நடித்திருந்தார். மூன்று பெண்கள் மூன்று ஆண்களிடம் சிக்கி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும்விதமாக இப்படத்தின் கதைக்களம் இருந்தது. 23 கோடி ரூபாயில் தயாரான இப்படம் 107 கோடிக்கு மேல் ஈட்டி தந்ததாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தினைதான் தமிழில் ஸ்ரீதேதியின் கணவர் ரீமேக் செய்து வருகிறார். படத்தை ‘சதுரங்கவேட்டை’ இயக்குநர் ஹெச். வினோத் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் அஜித் நடித்து வருகிறார். இதற்கான பூஜை சமீபத்தில் போடப்பட்டது.

‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் ஸ்ரீதேவியுடன் அஜித் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். அப்போது தமிழில் தங்களின் கம்பெனிக்கு ஒரு படம் நடித்து தர வேண்டும் என நடிகை ஸ்ரீதேவி கேட்டுக் கொண்டுள்ளார். ஆகவே அதற்காக அஜித் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதோடு, இந்தி படமான ‘பிங்க்’ படத்தை ரீமேக் செய்யலாம் என்றும் யோசனை கூரியுள்ளார். ஆகவே அவரது விருப்பப்படி இந்தப் படம் இந்தியில் இருந்து தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த வழக்கறிஞர் கேரக்டரில் அஜித் நடிக்க உள்ளார்.

அஜித்தின் கால்ஷீட்டிற்காக தமிழ்த் தயாரிப்பாளர்கள் பல காத்துக் கொண்டிருக்கும்போது எப்படி போனி கபூர் கம்பெனிக்கு இவர் படம் பண்ண சம்மதித்தார் என்று பலரும் ஆச்சர்யப்பட்டு வருகின்றனர். இந்தக் கூட்டணி மூலம் போனி கபூர் தமிழில் முதன்முதலாக கால் பதித்துள்ளார். மேலும் இந்த கம்பெனி தென் இந்திய பட உலகில் பல படங்களைத் தயாரிக்க உள்ளது.

இந்தப் படம் முடிந்த உடன் மேலும் ஒரு படம் அஜித் நடித்து தருவதாக ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இயக்குநர் வினோத் பற்றி போனி கபூர் கூறுகையில், “வினோத் மிக திறமையான இயக்குநர். அவர் வேலைகள் சிறப்பாக உள்ளது. அவர் இப்படத்தின் கதையை தமிழ் திரை ரசிகர்களுக்கு தக்க வடிவமைத்திருக்கிறார். அஜித்தான் வினோத்தை சந்தித்து பேச சொன்னார். உடனே வினோத் மும்பை வந்து என்னை சந்தித்தார்” என்றவரிடம் இந்தப் படத்தில் அமிதாப் பச்சன் நடிப்பதாக தகவல் பரவுகிறதே என்று கேட்டதற்கு அவர், “இல்லை. அது உண்மை இல்லை” என்றும் விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில் இந்தப் படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஒரு தெலுங்கு நடிகையாவார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘ஹலோ’ நல்ல வரவேற்பை அடைந்தது. இந்தப் படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார் கல்யாணி. முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் அவார்ட்டை இவர் தட்டிச் சென்றிருந்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close