‘இந்தியன்2’ படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தள்ளிப் போக உள்ளதாக தெரியவந்துள்ளது.
‘2.0’ படத்திற்கு பிறகு இயக்குநர் ஷங்கர் இயக்கவுள்ள திரைப்படம் ‘இந்தியன்2’. இது 1996ம் ஆண்டு வெளியான ‘இந்தியன்’ படத்தின் அடுத்த பாகமாகும். கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி இருந்த இந்தப் படம் ப்ளாக்பாஸ்டர் ஹிட் ஆனது. தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது. கிராஃபிக் காட்சிகள் ரீதியாகவும் அதிகம் பேசு பொருளானது. அதன் பிறகு ஷங்கர் இந்திய சினிமாவின் ஒரு அடையாளமாக உருவெடுத்தார்.
முதல் பாகத்தில் மனிஷா கொய்ராலா, ஊர்மிளா, சுகன்யா உள்ளிட்ட நடிகைகள் நடித்திருந்தனர். கமல் இதில் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். இந்த பிரம்மாண்ட வெற்றியை மீண்டும் ஈடுகட்டவே ஷங்கர் அதன் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டுள்ளார்.
அதன்படி இந்த ஆண்டு குடியரசு தினமான ஜனவரி 26 அன்று தைவானில் ஹைட்ரஜன் பலூனை பறக்கவிட்டு ‘இந்தியன்2’படத்தின் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ஷங்கர். இதனிடையே ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் ‘இந்தியன்2’ படத்தில் தான் நடிப்பதை உறுதி செய்தார் கமல்ஹாசன். அதனையடுத்து சமீபத்தில் காஜல் அகர்வால் இப்படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில் படத்தின் செட் வேலைகள் பூஜையுடன் தொடங்கின. அதனையடுத்து டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் எனக் கூறப்பட்ட நிலையில் திட்டமிட்டபடி வேலைகள் முடியாததால் ஜனவரி மாதத்திற்கு படப்பிடிப்பு தள்ளி போய் உள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்..! - தர்மஅடி கொடுத்த மக்கள்
குளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்
கலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..!
ட்விட்டரில் யார் டாப் ? - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்
இது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..?’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்
இது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..?’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்
கலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..!
“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..!
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்