[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

கமல்ஹாசனுக்காக களரி கற்கும் காஜல் அகர்வால் 

kajal-aggarwal-learns-kalari-for-kamal-haasan-s-indian-2

கமல்ஹாசனின் ‘இந்தியன்2’ படத்திற்காக நடிகை காஜல் அகர்வால் களரி பயிற்சி கற்று வருவதாக செய்தி கிடைத்துள்ளது. 


தமிழில் அதிகம் அறிமுகமான நடிகை காஜல் அகர்வால். விஜய் போன்ற இளம் நடிகர்களுடன் இவர் நடித்து வருகிறார். அதே அளவுக்கு இவர் தெலுங்கு திரை உலகிலும் முதன்மையான நடிகையாக வலம் வருகிறார். துறுதுறு என அவர் திரையில் தனது நடிப்பை வெளிப்படுத்துவதால் இருமாநில ரசிகர்களும் அவரை அதிகம் விரும்புகின்றனர்.

சமீபத்தில் தெலுங்கில் அவர் நடித்துள்ள ‘கவசம்’ படத்தின் இசை வெளிட்டு விழா நடந்தது. அதில் காஜல், தனது இணை நடிகர் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீநிவாஸ் உடன் பங்கேற்றார். அப்போது அவர், இந்தக் கதையை கேட்டவுடன் அதில் விழுந்துவிட்டதாக தெரிவித்தார். 

மேலும் சாய் உடன் சேர்ந்து மேலும் ஒரு படத்தில் நடித்து வருவதாக குறிப்பிட்ட அவர், அதனிடையே நான் ஏற்கெனவே நடிகர் கமல்ஹாசனுடன் ஒரு படம் நடிக்க இருக்கிறேன் என்று கூறினார். ஆனால் இவர் கமல் குறித்து குறிப்பிடும் படம் பற்றிய செய்தி அதுவரை அதிகாரப்பூர்வமாக  ஏதும் வெளியாகவில்லை. ஆகவே அது எந்தப் படம் என்பது குறித்து பெரிய எதிர்ப்பார்ப்பு எழுந்தது.

இந்நிலையில் காஜல், சமீபத்தில் அமெரிக்கா சென்று வந்ததாகவும் அங்கே நடந்த ‘இந்தியன்2’ நடிகை தேர்வில் இவர் கலந்து கொண்டதாகவும் அதற்கான மேக் அப் டெஸ்ட் கூட எடுக்கப்பட்டுவிட்டதாகவும் தகவல் கசிந்தது. பின்பு 

பலரும் எதிர்ப்பாக்கும் கமல்ஹாசனின் ‘இந்தியன்2’ படத்தில் காஜல் நடிக்க உள்ளது உறுதியானது.  இதனுடன் 
கமல்ஹாசனின் புதிய தோற்றத்திற்கான புகைப்படம் எடுக்கும் பணிகள் நடைபெற்றன. 

இந்நிலையில்‘இந்தியன்2’ படத்திற்காக காஜல் அகர்வால் களரியாட்டம் கற்று வருவதாக செய்தி கிடைத்துள்ளது. அவர் தனது சமூக வலைத்தளத்தில் ‘களரி’ சம்பந்தமான புத்தகத்தை படிப்பதை போன்ற புகைப்படம் ஒன்றை பகிர்ந்துக் கொண்டுள்ளார். இதன் மூலம் இச்செய்தி உறுதியாகியுள்ளது.

தென் இந்திய பகுதியில் தற்காப்புக் கலையான களரியாட்டம் மிகவும் பிரபலம் வாய்ந்தது. இந்தப் படத்தின் மூலம் காஜல் முதன்முறையாக கமலுடன் இணைய இருக்கிறார். அதோடு அவரது திரை வாழ்வில் ஷங்கர் இயக்கத்திலும் முதன்முறையாக இணைந்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்குவதாக திட்டமிட்டப்பட்டுள்ளது.  ஆனால் படத்திற்கான செட் வேலைகள் இன்னும் முடிவடையாததால் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொங்க உள்ளதாக கூறப்படுகிறது.  

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close