[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS வரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்
  • BREAKING-NEWS ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு

ஹீரோயினை பாலியல் சீண்டல் செய்த கும்பல்: பளார் விட்டு தப்பியதால் பரபரப்பு!

zareen-khan-slaps-men-who-tried-to-touch-her

கடை திறப்புக்குச் சென்ற இந்தி நடிகையை கும்பல் சூழ்ந்துகொண்டு தவறாக தொட்டதால், நடிகை ரசிகரை அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தமிழில், நகுல் நடித்த ’நான் ராஜாவாகப் போகிறேன்’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியவர், இந்தி நடிகை ஜரீன் கான். இவர் இந்தியில் சல்மான் கான் நடித்த வீர், ரெடி, ஹவுஸ்புல் 2, ஹேட் ஸ்டோரி 3 உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் கடை திறப்பு விழா ஒன்றுகாக நேற்று முன் தினம் அவுரங்காபாத் சென்றிருந்தார்.

நடிகை வருவதை அடுத்து அங்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர். கடையை திறந்து வைத்துவிட்டு ரசிகர்களை நோக்கி அவர் கையசைத்தார். பின்னர் அவர் தனது காருக்குத் திரும்பினார். அவரது பாதுகாவலர்கள் அவருக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தனர். 

இருந்தாலும் கூட்டம் முண்டியடித்து நடிகையை நெருங்கியது. சிலர் அவரை தொட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சிலர் அவரை மானபங்கம் செய்தனர். அதிர்ச்சி அடைந்த நடிகை, சில ரை அடித்தார். பின்னர் கூட்டத்தைத் தள்ளிவிட்டார். அவரது பாதுகாவலர்களும் ரசிகர்களை தள்ளிவிட்டு காருக்கு அழைத்துச் சென்றனர். 

இதுபற்றி பின்னர் ஜரின் கான் கூறும்போது, ‘’சிலர் கண்டபடி என் மீது தொட்டனர். ஆத்திரமடைந்தது சிலரை அடித்து, தள்ளிவிட்டு தப்பித்தேன். இதுபோன்ற நிகழ்ச்சிகளின் போது பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close