[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது தேர்தல் ஆணையத்தின் செலவை குறைக்கும், நேரத்தையும் குறைக்கும்- திருமாவளவன்
  • BREAKING-NEWS ஒரே சமயத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த மோடி அரசு முடிவு
  • BREAKING-NEWS மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும்- தமிழக அரசு
  • BREAKING-NEWS நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி

துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பின் நடிகைக்கு மீண்டும் கொலைமிரட்டல்!

leena-paul-gets-fresh-threat-to-shut-down-beauty-parlour

கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்தவர் லீனா மரியா பால். இவர் மோகன்லாலின் ’ரெட் சில்லீஸ்’ மற்றும் ’ஹஸ்பெண்ட்ஸ் இன் கோவா’ உட்பட பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். மெட்ராஸ் கபே என்ற இந்தி படத்திலும் நடித்துள்ளார்.

இவர் கொச்சி பனம்பிள்ளி நகரில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். சென்னை கனரா வங்கியில், மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருடன் இணைந்து ரூ. 18 கோடி மோசடி செய்ததாக, இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மாலை 3.30 மணியளவில் பைக்கில் வந்த 2 பேர், இவரது பியூட்டி பார்லரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

சத்தம் கேட்டு அங்கு இருந்தவர்கள் அலறி ஓடினர். சுட்டுவிட்டு உடனடியாக இருவரும் பைக்கில் தப்பினர். சம்பவத்தின்போது லீனா கடையில் இல்லை. பெண் ஊழியர்கள் மட்டும் இருந்தனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த பகுதியில் பட்டப்பகலில் நடந்த துப்பாக்கிச்சூடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கொச்சி போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த சில நாட்களுக்கு முன் மும்பை தாதாவான ரவி புஜாரி என்பவர் லீனாவுக்கு போன் செய்து 25 கோடி ரூபாய் வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. மறுத்துள்ள லீனா, இதுபற்றி கொச்சி போலீசில் புகார் அளித்தார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் நடிகையை கொல்ல, இந்த கும்பல் வந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

 பியூட்டி பார்லர் அருகே கிடந்த பேப்பரில் ரவி புஜாரி குறித்த தகவல்கள் இருந்தன. அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆராய்ந்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இன்டர்நெட் போன் கால் மூலம் லீனாவுக்கு நேற்று மீண்டும் மிரட்டல் வந்துள்ளது. இதுபற்றி அவர் போலீ சில் தெரிவித்துள்ளார். பியூட்டி பார்லரை அந்த பகுதியில் இருந்து மூட வேண்டும் இல்லை என்றால் கொன்றுவிடுவோம் என்று அந்த போன் அழைப்பு மிரட்டியதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருடன் இப்போதும் தொடர்பிருக்கிறதா, இல்லையா என்பது பற்றி போலீசார் கேட்டபோது, இல்லை என்று மறுத்துள்ளார் லீனா. அவரது வாக்குமூலத்தில் முன்னுக்கு பின் முரணாக ஏதும் இருந்தால் அவரிடம் மீண்டும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close