[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்ற கோத்தபய ராஜபக்ச நவ.29 இந்தியா வருகை
  • BREAKING-NEWS ரஜினி, கமல், விஜய் சேர்த்து வந்தாலும் அதிமுக சிங்கிளாக எதிர்க்கும் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS மக்களின் நலனுக்காக கமலுடன் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவேன் - ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS அவசியம் ஏற்பட்டால் நானும், ரஜினியும் இணைவோம் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மருத்துவ மாணவரின் தந்தை சரவணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS மேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்
  • BREAKING-NEWS உள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

சமந்தாவின் காதலர் இவர் தானா?!

samantha-ruth-prabhu-s-lover

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா, இளம் கதாநாயகன் ஒருவரை விரைவில் காதல் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்திருந்தார். இதனால் சமூக வலைதளங்களில் அது யாராக இருக்கலாம் என்ற யூகங்கள் தீயாக பரவின.

ஆனால் சம்ந்தாவோ, காதலன் யார் என்பதை திருமண தேதியை தெரிவிக்கும்போது வெளியிடுவேன் என்று கூறி வந்தார். இந்நிலையில், சமந்தா காதலிக்கும் நடிகர் நாகசைதன்யா என்று தெலுங்கு பட உலகில் பரவலாக பேசப்படுகிறது. நாகசைதன்யா பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் ஆவார். தமிழில் சூப்பர் டூப்பர் வெற்றிபெற்ற விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீ-மேக்கில் நாகசைதன்யாவும் சமந்தாவும் ஜோடியாக நடித்தனர்.

விண்ணைத்தாண்டி வருவாயா படப்பிடிப்பின் போது இருவருக்கும் காதல் ஏற்பட்டதாகவும், இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. திருமணம் குறித்த தகவலை சமந்தா வெளியிட்டதும் நாகசைதன்யாவுக்கு ஏராளமானோர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே நடிகர் சித்தார்த்துடன் சமந்தா இணைத்து பேசப்பட்டு வந்த நிலையில், அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாகக் கூறப்பட்டது. தற்போது சமந்தா தமிழ், தெலுங்கு உலகில் தீவிராமாக நடித்து வருவதுடன் சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close