[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு
  • BREAKING-NEWS சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS கர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் எம்எல்ஏக்களை கடத்தியதால்தான் பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு பன்றிக்காய்ச்சல் வந்தது - பி.கே.ஹரிபிரசாத்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்

விஸ்வாசத்தின் பாடல்கள் வெளியீடு - ரசிகர்கள் உற்சாகம்

viswasam-full-audio-songs-released-ajith-kumar-nayanthara

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படத்தின் அனைத்து பாடல்களையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

நடிகர் அஜித்தை வைத்து இயக்குநர் சிவா வீரம், வேதாளம், விவேகம் உள்ளிட்ட படங்களை இயக்கினார். அவர் அஜித்துடன் 4-வது முறையாக கூட்டணி சேர்ந்த திரைப்படம் விஸ்வாசம். 4 வது முறையும் கூட்டணி சேர்ந்ததால் அதிக எதிர்பார்ப்பு உருவாகியது. இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டரை நவம்பர் 27 ஆம் தேதி படக்குழுவினர் வெளியிட்டனர். எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென்று மோஷன் போஸ்டர் விடப்பட்டாலும் வழக்கம்போல் அஜித் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

இதைத்தொடர்ந்து அவ்வப்போது படப்பிடிப்பு புகைப்படங்கள், அஜித்தின் புகைப்படங்கள் ஆகியவை இணையத்தில் லீக் ஆகி ட்ரெண்ட் ஆகின. விஸ்வாசம் மூலம் முதன்முதலாக அஜித்துக்கு இசையமைக்கிறார் இமான். படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தில் அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு ‘அடிச்சு தூக்கு’ என்ற பாடலை வெளியிட்டு விருந்தளித்தது படக்குழு.

இதையடுத்து விஸ்வாசம் படத்தின் இரண்டாவது பாடலான, வேட்டிகட்டு எனும் பாடலின் லிரிக் வீடியோ நேற்று வெளியிடப்பட்டது. இந்நிலையில் படத்தின் மொத்த பாடலும் இன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதன்படி அனைத்து பாடல்களையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close