[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS பத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS திருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்
  • BREAKING-NEWS சென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்

நடிகையின் பியூட்டி பார்லரில் துப்பாக்கிச் சூடு: மும்பை தாதா கும்பல் கைவரிசை

gangsters-open-fire-at-kochi-beauty-parlour-owned-by-actress

கொச்சியில் பட்டப்பகலில் நடிகையின் பியூட்டி பார்லர் மீது 2 பேர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்தவர் லீனா மரியா பால். இவர் மோகன்லாலின் ’ரெட் சில்லீஸ்’ மற்றும் ’ஹஸ்பெண்ட்ஸ் இன் கோவா’ உட்பட பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். மெட்ராஸ் கபே என்ற இந்தி படத்திலும் நடித்துள்ளார்.

இவர் கொச்சி பனம்பிள்ளி நகரில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். சென்னை கனரா வங்கியில் 18 கோடி மோசடி செய்ததாக, இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை 3.30 மணியளவில் பைக்கில் வந்த 2 பேர், இவரது பியூட்டி பார்லரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

சத்தம் கேட்டு அங்கு இருந்தவர்கள் அலறி ஓடினர். சுட்டுவிட்டு உடனடியாக இருவரும் பைக்கில் தப்பினர். சம்பவத்தின்போது லீனா கடையில் இல்லை. பெண் ஊழியர்கள் மட்டும் இருந்தனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த பகுதியில் பட்டப்பகலில் நடந்த துப்பாக்கிச்சூடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கொச்சி போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த சில நாட்களுக்கு முன் மும்பை தாதாவான ரவி புஜாரி என்பவர் லீனாவுக்கு போன் செய்து 25 கோடி ரூபாய் வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி அவர் கொச்சி போலீசில் புகார் அளித்தார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் நடிகையை கொல்ல, இந்த கும்பல் வந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

பியூட்டி பார்லர் அருகே கிடந்த பேப்பரில் ரவி புஜாரி குறித்த தகவல்கள் இருந்தன. அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆராய்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close