[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

உண்மை தெரியாமல் துல்கரை கண்டித்த மும்பை போலீஸ்!

mumbai-police-wrongly-reprimands-dulquer-salmaan

உண்மை என்னவென்று தெரியாமல் நடிகர் துல்கர் சல்மானை மும்பை போலீசார் கண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழில், வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி, சோலோ, நடிகையர் திலகம் உட்பட பல படங்களில் நடித்தவர் மலையாள நடிகர் துல்கர் சல்மான். நடிகர் மம்மூட்டியின் மகனான இவர், இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இப்போது, த ஸோயா ஃபேக்டர் என்ற இந்தி படத்தில் நடித்துவருகிறார். இதில் அவர் ஜோடியாக, சோனம் கபூர் நடிக்கிறார்

இவரது வீடியோ ஒன்றை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்ட மும்பை போலீஸ், கண்டனம் தெரிவித்திருந்தது. அந்த வீடியோவில், சொகுசு காரின் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்துகொண்டு செல்போனை பார்த்துக்கொண்டிருக்கிறார் துல்கர் சல்மான். அருகில் இருந்து, ஆபத்தானவர் என்று பெண்குரல் கேட்கிறது. இது, நடிகை சோனம் கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்த வீடியோ. 

அதை எடுத்து ’’இது நிஜமாகவே ஆபத்தானதுதான். கார் ஓட்டும்போது இது மாதிரி செய்வது உடன் செல்பவர்களின் உயிரையும் பணயம் வைப்பதற்கு சமம். இதை நாங்கள் சினிமாவில் கூட அனுமதிக்கமாட்டோம்" எனப் பதிவிட்டிருந்தது மும்பை போலீஸ். இதையடுத்து இது சர்ச்சையானது.

உடனடியாக நடிகை சோனம் கபூர், ’’நாங்கள் காரை ஓட்டவில்லை. அந்த கார் ஒரு டிரெக்கால் இழுத்துச் செல்லப்படுகிறது. ஷூட்டிங்கிற்காக நடத்தப்பட்டக் காட்சி அது. எங்கள் மீது அக்கறை கொண்டதற்கு மகிழ்ச்சி. சாதாரண மக்களிடமும் இந்த அக்கறை இருக்கும் எனத் தெரியும். நன்றி’’ என்று தெரிவித்திருந்தார். 


 
இதற்கு பதிலளித்த மும்பை போலீஸ்,  ``மும்பை மக்கள்  அனைவரும் எங்களுக்கு ஸ்பெஷல்தான். நீங்கள் பாதுகாப்புடன் சென்றதை அறிந்ததில் மகிழ்ச்சி” எனப் பதிவிட்டது.
 
பின்னர் முழு வீடியோவையும் பதிவிட்ட துல்கர் சல்மான், ’நான் ஓட்டிய கார், ட்ரக்கில் கட்டப்பட்டுள்ளது. முன்னே கேமரா இருந்தது. நானே நினைத்தாலும் காரை திருப்பவோ, ஓட்டவோ முடியாது” எனக் கூறியிருந்தார். துல்கருக்கு பதிலளித்த மும்பை போலீஸ், ’’நீங்கள் விதிமீறலில் ஈடுபடாததற்காக பாராட்டுகிறோம்’’ எனப் பதிவிட்டது.  

’’ட்வீட் செய்வதற்கு முன் உண்மை என்னவென்பதை தெரிந்துகொண்டு செய்திருந்தால், பாராட்டியிருக்கலாம்’’ என்று துல்கர் கூறியிருந்தார். இதையடுத்து ரசிகர்கள் சிலர் மும்பை போலீசை கிண்டல் செய்ய தொடங்கினர்.

சோனம் கபூர் குறுக்கிட்டு, போலீஸ் தனது கடமையை செய்துள்ளது. அவர்களை கிண்டல் செய்ய வேண்டாம்’’ என கூறியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close