[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது
  • BREAKING-NEWS காணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்
  • BREAKING-NEWS சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்

விஸ்வாசம் படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியாக வாய்ப்பு!

viswasam-s-2nd-single-track-expected-today

விஸ்வாசம் படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

அஜித்துடன் இயக்குநர் சிவா ‘விஸ்வாசம்’ படத்தின் மூலம்  4வது முறையாக கூட்டணி சேர்ந்தார். எனவே அதிகமான எதிர்பார்ப்பு இப்படத்திற்கு உருவாகியது. இந்தப் படம் பொங்கல் அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரை நவம்பர் 27 ஆம் தேதி படக்குழுவினர் வெளியிட்டனர். எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென்று மோஷன் போஸ்டர் விடப்பட்டாலும் வழக்கம்போல் அஜித் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். போஸ்டர் வெளியாகி சிறிது நேரத்தில் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானது. 

பொங்கல் பண்டிகை நெருங்கினாலும் விஸ்வாசம் படம் குறித்த அப்டேட் சற்று மெதுவாக நடந்து வருகிறது. ஆனால் பொங்கல் போட்டியாக பார்க்கப்படும் பேட்ட திரைப்படம் அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொடுத்து வந்தனர். இதனையடுத்து ‘விஸ்வாசம்’ அப்டேட் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தயாரிப்பு நிறுவனத்துக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர். உடனடியாக ‘அடிச்சு தூக்கு’ என்ற பாடலை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்தளித்தது படக்குழு.

குத்துப்பாடலான அடிச்சுத்தூக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை என்றாலும் பாடல் வெளியீடு குறித்து அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்

இதற்கிடையே அஜித் நடிப்பில் சதுரங்கவேட்டை இயக்குநர் வினோத் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது. இந்தப்படம் 2019 மே1ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close