[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

“முருகதாஸ் மீது நடவடிக்கை கூடாது” - நீதிமன்றம் அறிவுறுத்தல்

high-court-said-don-t-take-any-action-against-director-murugadas

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீதான வழக்கில் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என சென்னை காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

‘சர்கார்’ திரைப்படத்தில் இலவச திட்டங்கள் விமர்சிக்கப்பட்டதாக தொடர்ந்த வழக்கில் ஏ.ஆர்.முருகதாஸ் மீது சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முருகதாஸ் தரப்பில் அவசர முறையீடு செய்யப்பட்டது. அரசுக்கு எதிராக இருப்பதாகக் கூறப்படும் காட்சிகள் நீக்கப்பட்டுவிட்டாதால், அதில் அடிப்படை முகாந்திரம் இல்லை என மனுவில் கோரியுள்ளார். 

இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது‌. அப்போது முருகதாஸுக்கு எதிரான புகார் அளித்த தேவராஜன் ஆஜராகி, படத்தில் இயக்குநர் முருகதாஸ், விலையில்லா பொருட்களை எரிப்பது போன்று இருந்த காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாக தெரிவித்தார். அத்துடன் இது தவறான முன்னுதாரணமாக இருப்பதாகவும் கூறினார். அப்போது நீதிபதி குறுக்கிட்டு பிரபலமானவர்கள் செய்தால் அது தப்பு, அதையே பிரபலமில்லாதவர்கள் செய்தால் தப்பில்லையா எனக் கேள்வி எழுப்பினார். 

அதேவேளையில் வழக்கில் அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராகி வாதிட இருப்பதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டுமென காவல்துறை வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். அதனையேற்று வழக்கை டிசம்பர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அதுவரை முருகதாஸ் மீதான எஃப்.ஐ.ஆர்-ல் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது எனக் காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close