[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

ரஜினிகாந்துக்கு பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்து

cine-artists-birthday-wishes-to-for-rajinikanth

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 68 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனால் அவருக்கு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

‘பேட்ட’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் காஜா புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் இருப்பவர்கள் உதவி செய்ய முன்வரவேண்டும் எனவும் அரசால் மட்டுமே அனைத்து உதவிகளையும் செய்ய முடியாது எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 68 வது பிறந்த நாளை முன்னிட்டு அவர்களின் ரசிகர்கள் படு உற்சாகத்தோடு நலதிட்ட உதவிகளையும் சிறப்பு பூஜைகளையும் செய்து வருகின்றனர்.

மேலும் பல்வேறு திரை பிரபலங்களும் அரசியல் கட்சித்தலைவர்களும் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளனர்.

நடிகை சிம்ரன் வெளியிட்டுள்ள வீடியோவில், “ஹலோ சார், நீங்க நடிச்ச எல்லா படங்களையும் பார்த்துவிட்டேன். இன்னும் நிறைய படங்கள் நீங்க நடிக்க வேண்டும். நீங்கதான் எங்க எல்லோருக்கும் முன்மாதிரி. நீங்க ஆரோக்கியத்துடன் நல்லா இருக்கணும். பிறந்த நாள் வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ‘பேட்ட’ படத்தின் டீசரை வெளியிட்டு பிறந்த நாள் வாழ்த்துகள் தலைவா என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை த்ரிஷா, உங்களை போன்றோருடன் சார்ந்திருக்கவே விரும்புவதாகவும் பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா எனவும் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

பாடலாசிரியர் விவேக் கூறுகையில், 40 வருடங்களாக இந்தத் திரையுலகத்தை திறமையாலும், எளிமையாலும், உழைப்பாலுயும் கட்டி இழுத்துகொண்டிருக்கிற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் உலகத்தில் ஒரே ஒரு சூப்பர்ஸ்டார். அது ரஜினிகாந்த்தான் எனவும் உங்கள் மந்திரம் எங்கள் எல்லோரையும் மயக்கி விடுகிறது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

நடிகை நயன்தாரா, “பிறந்த நாள் வாழ்த்துகள் சார். நீங்களே எனது முன்மாதிரி, குரு. நீங்க மட்டும் தான் சூப்பர் ஸ்டார். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் தலைவா” எனத் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன், “உங்கள் பெயரை சொன்னதும் பெருமை சொன்னதும் கடலும் கைத்தட்டும்...இந்த உலகம் தாண்டிய உயரம் கொண்டதில் நிலவு தலைமுட்டும். உங்கள் ரசிகனாக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

நடிகை காஜல் அகர்வால், எல்லோருக்கும் பிடித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் எனவும் உங்களின் நித்திய மகிழ்ச்சியும் ஆசிர்வாதமும் வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

நடிகர் அபிஷேக்பச்சன், “பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா. இந்த வருடம் இனிதாக அமையட்டும் ரஜினி அங்கிள்” எனத் தெரிவித்துள்ளார்.

சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் “தி ஒன், ஒன்லி ஒன்! ஹேப்பி பர்த்டே மை டியரஸ்ட் அப்பா” என தெரிவித்துள்ளார்.

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதில், ”தலைவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வரும் ஆண்டு உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தையும், ஆசிர்வதிக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும் ரஜினிகாந்த் சார்” என்று தெரிவித்துள்ளார்.

பலருக்கு உத்வேகம் தருகின்ற உலகெங்கிலும் உள்ள ரசிகர்களின் இதயங்களைப் பற்றிக் கொண்டிருக்கும் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என கிரிக்கெட் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.

ஒரே ஒரு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் என நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தி நடிகர் அமிதாப்பச்சன், நடிகர் கமல்ஹாசன், மலையாள நடிகர் மோகன்லால், இயக்குநர் சங்கர், விஷால், அசோக் செல்வன், பிரேம்ஜி, மகேஷ்பாபு, பிரீத்தி சிங், ராதிகா, தமன்னா, ரம்யா நம்பீசன், ஹன்சிகா, ஆர்த்தி, கஸ்தூரி, சங்கர் மகாதேவன், உள்ளிட்ட பல பிரபலங்கள் ரஜினிகாந்துக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close