[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது
  • BREAKING-NEWS காணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்
  • BREAKING-NEWS சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்

ரஜினியின் பிறந்தநாள் பரிசாக ‘பேட்ட’ டீசர்

bday-special-teaser-releasing-tomorrow-at-11am

ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘பேட்ட’ படத்தின் டீசர் நாளை காலை 11 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

‘2.0’ படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட’. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இது பொங்கல் அன்று திரைக்கு வரவுள்ளது.

இதில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன், த்ரிஷா நடித்துள்ளனர். சசிக்குமார், விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, நவாஜுதீன் சித்திக் என நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளனர். ‘பேட்ட’ படத்தின் சூட்டிங் வேலைகள் முடிந்து போஸ்ட் புரெடெக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள ‘மரண மாஸ்’ என்ற பாடலை கடந்த 3-ம் தேதி படக்குழுவினர் வெளியிட்டனர்.

அனிருத், எஸ்பிபி ஆகியோர் இணைந்து பாடிய இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. நீண்ட நாட்கள் கழித்து ரஜினிக்கு குத்து பாடல் கிடைத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.
இதையடுத்து ‘பேட்ட’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘உல்லல்லா’ என்ற பாடலை யுடியூப்பில் படக்குழு வெளியிட்டனர். இந்தப் பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து ‘பேட்ட’படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று முன்தினம் சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில் ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர்.

இதில் பேசிய ரஜினி, ”விஜய் சேதுபதியை பார்த்திருக்கேன். நல்ல நடிகன் என்று நினைத்து இருந்தேன். ஆனால் பழகிய பிறகுதான் தெரிந்தது அவர் மகா நடிகன். அதேபோல் நல்ல மனிதன். நீண்ட நாள் கழித்து நல்ல நடிகனோடு நடித்த திருப்தி ஏற்பட்டுள்ளது. திரிஷாவுக்கு மிகச்சிறிய கதாப்பாத்திரம் தான். அவர்கள் எப்படி இதில் நடிப்பார்கள் என்று கேட்டேன். ஆனால் அவர் இதை மிகவும் விரும்பி நடிக்க ஒப்புக்கொண்டார்கள். இன்னமும் இளமையாகவே திரிஷா காட்சியளிக்கிறார். அதற்கு யோகா செய்வதே காரணம் என தெரிவித்தார்.” என அனைத்து நடிகர் நடிகைகளை பற்றியும் பேசினார்.

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய நடிகை சிம்ரன்,  “இது எனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு. 15 வருடத்திற்கு முன்பே ரஜினி சாருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதை தவறவிட்டுவிட்டேன். அதற்காக வருத்தப்பட்டேன். தற்போது எனது ஆசை நிறைவேறிவிட்டதால் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என தெரிவித்தார்.

இந்நிலையில், நாளை ரஜினிகாந்தின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ‘பேட்ட’ படத்தின் டீசர் நாளை காலை 11 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Advertisement:
Related Tags : BdayTeaserReleasingTomorrow at 11amRajinikanthPetta
Advertisement:
Advertisement:
[X] Close