[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது
  • BREAKING-NEWS வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்
  • BREAKING-NEWS மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை
  • BREAKING-NEWS சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை
  • BREAKING-NEWS தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு
  • BREAKING-NEWS தமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்

பாலியல் தொழிலாளி என்பதா? மானேஜர் மீது நடிகை பரபரப்பு புகார்!

zareen-files-for-fir-against-manager-over-character-assassination

தன்னை பாலியல் தொழிலாளி என்று கூறிய மானேஜர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்தி நடிகை ஸரீன் கான் போலீசில் புகார் கொடுத் துள்ளார். 

தமிழில், நகுல் நடித்த ’நான் ராஜாவாகப் போகிறேன்’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியவர், இந்தி நடிகை ஜரின் கான். இவர் இந்தியில் வீர், ரெடி, ஹவுஸ்புல் 2, ஹேட் ஸ்டோரி 3 உட்பட பல படங்களில் நடித்துள்ளார். 

இவரது மானேஜராக இருந்தவர் அஞ்சலி அதா. இவர்தான் ஹிர்த்திக் ரோஷன், கங்கனா ரனவ்த் போன்றோருக்கும் மானேஜராக இருந்தார். நான்கு மாதங்கள் மட்டுமே இவரை மானேஜராக வைத்துக்கொண்ட ஜரின், பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து விலகி வேறொருவரை மானேஜராக வைத்துக்கொண்டார்.

இதற்கிடையே ஜரினுக்கும் அஞ்சலிக்கும் பண விவகாரம் தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இருவரும் ஆபாசமாகத் திட்டி குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டனர்.  அப்போது அஞ்சலி, பாலியல் தொழிலாளி என்று பொருள்படும்படி, ஜரினை திட்டியும் அவரது புகழைக் கெடுக்கும் படி மெசேஜூம் அனுப்பினாராம். இதனால் கோபமடைந்த ஜரீன், மும்பை கர் போலீஸ் ஸ்டேஷனில் அஞ்சலி மீது புகார் கொடுத்துள்ளார்.

அதில், அஞ்சலி தன்னை பற்றி தவறான தகவல்களைப் பரப்புவதாகவும் இன்னும் தனக்கு மாஜேனராக இருப்பதாகச் சொல்லி பணம் வாங்கு வதாகவும் கூறியுள்ளார். 

இதுபற்றி அவரது வழக்கறிஞர் ரிஸ்வான் சித்திக் கூறும்போது, ’மானேஜராக இருக்கும் நபரை ஜரின் கண்மூடித்தனமாக நம்பினார். அதை வைத்துக்கொண்டு அவர் பெயரை கெடுக்கும்விதமாக அஞ்சலி செயல்பட்டுள்ளார். படங்களில் நடிக்க வைப்பதாக அவர் பெயரை சொல்லி பணமும் வாங்கியுள்ளார். இதுபற்றி முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று புகார் கொடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.

மானேஜர்களுக்கும் ஹீரோயின்களுக்குமான மோதல் இந்தி சினிமாவில் புதிதில்லை. பிரியங்கா சோப்ரா உட்பட பல நடிகைகள் தங்கள் முன்னாள் மானேஜர்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close