[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

'பேட்ட' படத்தில் விஜய் சேதுபதி யார் ? இன்று போஸ்டர் வெளியீடு

what-is-vijay-sethupathi-role-in-petta-unveiling-today

"பேட்ட" படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கதாப்பாத்திரத்தின் போஸ்டர் இன்று வெளியிடப்படவுள்ளதாக அதன் தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் வெளியாகியுள்ள 2.0 திரைப்படம் பட்டையை கிளப்பி வசூலை அள்ளி வருகிறது. இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்  ’பேட்ட’ படத்தில் நடித்து பொங்கல் அன்று திரைக்கு வர உள்ளது.

இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். மேலும், சசிக்குமார், விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, திரிஷா, நவாஜுதீன் சித்திக், என பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு டேராடூன், டார்ஜிலிங், ஆக்ரா மற்றும் சென்னையில் நடைபெற்றது.  ஏற்கெனவே ’பேட்ட’ ரஜினியின் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டனர்.

இதைத்தொடர்ந்து இன்னொரு புகைப்படமும் வெளியிட்டனர். இதனால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடனும் எதிர்பார்ப்புடனும் உள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் மரண மாஸ் என்ற பாடல் நேற்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது. இந்தப் பாட்டு இப்போது பட்டித்தொட்யெங்கும் ஹிட் அடித்துள்ளது. இன்னொரு பாடலை வரும் 7 ஆம் தேதி வெளியிடுகின்றனர். பாடல்கள் வெளியீட்டு விழா வரும் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. 

இதனையடுத்து நடிகர் விஜய் சேதுபதி பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார் என கூறப்படுகிறது. இந்நிலையில் முதல் முறையாக விஜய் சேதுபதியின் கதாப்பாத்திரப் போஸ்டர் இன்று மாலை வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close