[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

மறக்க முடியாத சில்க் ஸ்மிதா ! பிறந்தநாள் நினைவலைகள்

silk-smitha-birth-day-today-fans-remembers

நடிகை சில்க் ஸ்மிதா பிறந்த நாள் இன்று. சில்க் ஸ்மிதாவின் ரசிகர்கள் அவரின் படத்தை தங்களது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து, எந்த நடிகையும் அவருக்கு இணையாக முடியாது என பகிர்ந்து வருகின்றனர். அவர் 22 ஆண்டுகள் கடந்தாலும், அவரது இடத்தை தமிழ் சினிமாவில் யாரும் இதுவரை பிடிக்கவில்லை என்று தான் கூறவேண்டும். இனியும் எவரேனும் பிடிப்பார்களாக என்றால் அது சந்தேகம் தான்.

தமிழ் சினிமா உலகை தனி பெண்ணாக கட்டி ஆண்டு கொண்டிருந்த நடிகை சில்க் ஸ்மிதா. வண்டிச்சக்கரம் படத்தில் நாட்டுப்புற பெண் பார்கேர்ள் ஆக நடிக்கும் கதாபாத்திரம் அவருக்கு கொடுக்கப்பட்டது. அதில் அவரது பெயர் சில்க். அன்று முதல் சில்க் ஸ்மிதா ஆக அரிதாரம் பூசினார். அவரது உண்மையான பெயர் விஜயலக்ஷ்மி. ஆந்திர மாநிலத்தை பூர்வீகம் என பலர் இவருக்கு வரலாறு எழுதினாலும் சில்க் தன்னை ’கரூர் பொண்ணு’ என்றே குறிப்பிட்டுக் கொண்டிருந்தார். சினிமாவில் முதல் அடியே அவருக்கு அமர்க்களமாக அமைந்தது. அதன்பின் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 17 வருடங்கள் தென் இந்திய சினிமா உலகம் அவருக்காக காத்திருந்தது. 500 படங்கள் வரை நீண்டது அவரது நடிப்பு பட்டியல்.

பெரிய பெரிய கதாநாயாகர்களே இவருடன் சேர்ந்து டான்ஸ் ஆடினால்தான் படம் ஹிட் ஆகும் என்று நம்ப ஆரம்பித்தனர். பல ஏரியாக்கள் கொண்ட சினிமா உலகில் பி அண்ட் சி ரசிகர்கள் மத்தியில் ஸ்மிதாவுக்கு என்று தனி இடம் இருந்தது. அவரை வைத்தே விநியோகஸ்தர்கள் வியாபாரம் பேசிய காலம் இருந்தது. இவரது அடையாளம் கவர்ச்சி என சொன்னாலும் ‘அலைகள் ஓய்வதில்லை’ ‘அவசர போலீஸ் 110’, ‘தாலாட்டு கேட்குதம்மா’ என சில படங்களில் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாகவும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தார் சில்க். 

இவரை முன்மாதிரியாக வைத்து அனுராதா, டிஸ்கோ சாந்தி, குயிலி என பலர் புறப்பட்டார்கள். அத்தனை பேரும் தனக்குப் போட்டி என்று தெரிந்தும் அவர்கள் அனைவருடனும் நல்ல நட்பை வைத்திருந்தார் சில்க். இவர்களை வைத்து தனது தயாரிப்பில் படங்களை கூட தயாரித்தார். 

சிலரை எல்லியாக புகழ்சூடி விமர்சிப்பதற்கு சிலரை ஒப்பிட்டு பேசுவார்கள். எடுத்துக்காட்டாக, வசதியை குறிப்பிட, “ஆமா.. இவரு பெரிய டாடா பிர்லா”, உடல்கட்டுமஸ்தை குறிப்பிட, “ஆமா.. இவரு பெரிய அர்னால்டு”, நடனத்தை குறிப்பிட, “ஆமா.. இவரு பெரிய மைக்கெல் ஜாக்சன்” எனக் கூறுவது வழக்கம். அந்த வரிசையில் ஒரு நடிகை அல்லது பெண்ணின் கவர்ச்சியை எல்லியாக புகழ்சூடி விமர்சிக்க, இன்று வரையிலும் சில்க் ஸ்மிதாவை குறிப்பிடுகிறார்கள் என்றால் அது மிகையல்ல.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close