[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

 “சீ யூ ஃபார் பொங்கல்.. அப்படினா என்ன சார்?” - சிம்புவை கேட்ட ரோபோ சங்கர்

megha-akash-s-new-promo-video-from-vtrv-announces-release-date

சிம்பு, ரோபோ சங்கர், மேகா ஆகாஷ் இணைந்து எடுத்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவலான கவனத்தை ஈர்த்து வருகிறது.

சுந்தர் சி இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. இந்தப் படம் தெலுங்கில் வெளியான ‘அத்திரிண்டிக்கி தாரிடி’  படத்தின் அதிகாரப்பூர்வமான ரீமேக் ஆகும். தெலுங்கில் பவன் கல்யாண் நடித்திருந்த கேரக்டரில் சிம்பு தமிழில் நடித்து வருகிறார். மேலும் இதில் கேத்ரின் தெரசா, மேகா ஆகாஷ், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, ரோபோ ஷங்கர், மகத் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தீபாவளி நாளன்று வெளியிடப்பட்டது. படத்தினை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. 

இப்படத்தின் தலைப்பு ‘வி’ என்ற முதல் எழுத்தில் அமையும் என முன்பே கூறியிருந்தது படக்குழு. அதே போல தலைப்பு ‘வி’யில் அமைந்திருந்தது.‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ தலைப்பை படக்குழு ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் சிம்பு பேசிய வசனத்தில் இருந்து எடுத்து பயன்படுத்தி இருப்பதாக தெரிகிறது. படத்திற்கு ஹிப் ஆப் தமிழா ஆதி இசையமைக்கிறார். இந்தப் படம் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது. 

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு சம்பந்தமான காட்சிகள் வெளியாகி இருந்தன. இதில் சிறப்பு என்னவென்றால் சிம்புவின் படப்பிடிப்பு ஆந்திராவிலுள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் எடுக்கப்பட்டு வருகின்றன. அதே ஸ்டுடியோவில் தெலுங்கு ஹீரோ மகேஷ் பாபுவின் ‘மகரிஷி’ படப்பிடிப்பும் நடைபெற்று வந்துள்ளது. சிம்பு ஸ்டியோவில் இருப்பதை அறிந்த மகேஷ் பாபு அவரை வந்து சந்தித்துள்ளார். 

சில மணிநேரங்கள் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இருவரும் மனம் திறந்து பல விஷயங்களை பேசியதாக தகவல் கிடைத்துள்ளது. மகேஷ் பாபு ‘கஜா’ புயல் குறித்து விசாரித்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே நடிகை மேகா ஆகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் ரோபோ சங்கர், பட்லர் இங்கிலீஷில் பொளந்து கட்டுகிறார். மேலும் மேகா ஆகாஷை பார்த்து ‘வீ வில் மீட் பொங்கல் என்று சொல்லுங்க’ என்கிறார். அதையையே சிம்புவையும் கூறச் சொல்கிறார். அதை கேட்ட சிம்பு ‘சீ யூ ஃபார் பொங்கல்’ என்கிறார். அது புரியாமல் ‘அப்படி என்றால்?’ என ரோபோ சங்கர் தடுமாறுகிறார். இந்த வீடியோ சமூக ஊடகத்தில் காமெடியாக பகிரப்பட்டு வருகிறது.     

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close