[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

பிரியங்கா- நிக் ஜோனாஸ் திருமணம்: மும்பையில் ஹாலிவுட் பிரபலங்கள்!

priyanka-nick-step-out-with-their-gang-in-mumbai

நடிகை பிரியங்கா சோப்ரா- நிக் ஜோனாஸ் திருமணம் நடைபெற உள்ளதை அடுத்து ஹாலிவுட் பிரபலங்கள் சிலர் மும்பை வந்துள்ளனர்.

தமிழில், விஜய் நடித்த ’தமிழன்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. பின்னர் இந்தியில் நடிக்கத் தொடங்கிய அவர், முன்னணி நடிகையானார். இப்போது ஹாலிவுட் படங்களிலும் தொடர்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தன்னை விட பத்து வயது குறைந்த ஹாலிவுட் பாப் பாடகரும் நடிகருமான நிக் ஜோனாஸை அவர் காதலித்தார். இவர்களின் நிச்சயதார்த்தம் ஜூலை மாதம் முடிந்துவிட்டது. நிச்சயதார்த்தத்துக்கு லண்டனில் உள்ள பிரபலமான நகைக்கடையில் நிக், 2 லட்சம் அமெரிக் க டாலர் மதிப்பில் மோதிரம் வாங்கியதாகக் கூறப்பட்டது. 

இவர்களது நிச்சயதார்த்த விருந்து மும்பை ஜுஹூவில் உள்ள பிரியங்கா சோப்ராவின் வீட்டில் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் கல ந்து கொண்டனர். அங்கு சிறப்பு பூஜையும் நடந்தப்பட்டது.இந்நிலையில் இவர்கள் திருமணம் ஜோத்பூரில் டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி நடக்க இருக்கிறது. 

கடந்த மாதம் பிரியங்காவும் நிக் ஜோனாஸும் ஜோத்பூர் சென்று திருமணம் செய்துகொள்ள இருக்கும் உமைத் பவன் அரண்மனையை (Umaid Bhawan Palace) பார்வையிட்டனர். இந்த அரண்மனையில் 347 அறைகள் உள்ளன. அனைத்தையும் திருமணத்துக்காக இரண்டு நாள் பதிவு செய் துள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு நாள் வாடகை 60 ஆயிரம் அமெரிக்க டாலர். இதன் இந்திய மதிப்பு ரூ.43 லட்சம்! 

(ஜோ ஜோனாஸ், ஷோபி டர்னர்)

இந்நிலையில், திருமணத்துக்கு முன்பாக, அதை அமெரிக்காவில் பதிவு செய்வதற்கான பணிகளில் நிக் ஜோனாஸும் பிரியங்கா சோப்ராவும் ஈடுபட்டனர். கலிபோர்னியாவில் உள்ள பெவரிலி ஹில்ஸ் பகுதி நீதிமன்றத்தில் திருமண உரிம சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப் பங்களை இருவரும் சமர்ப்பித்தனர். அந்த சான்றிதழ் கிடைத்துவிட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து நிக் ஜோனாஸ் இந்தியா வந்துள்ளார். அவருடன் அவர் தம்பியும் பாப் பாடகரும் ஹாலிவுட் நடிகருமான ஜோ ஜோனாஸு ம்  வந்துள்ளார். இவரது வருங்கால மனைவியும் ஹாலிவுட் நடிகையுமான ஷோபி டர்னரும் மும்பை வந்துள்ளார். இவர் ’கேம் ஆப் த்ரோன் ஸ்’ உட்பட சில ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். 

இவர்கள் தவிர, திருமணம் நடக்கும் போது இன்னும் சில ஹாலிவுட் பிரபலங்கள் வருவார்கள் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனாஸ் ஆகியோர் மும்பை ஜூஹுவில் உள்ள ரெஸ்டாரெண்ட் ஒன்றில் நண்பர்களுக்கு நேற்று இரவு விருந்து வைத்தனர். அதில் இவர்களுடன் ஜோ ஜோனாஸ், ஷோபி டர்னர், பிரியங்காவின் உறவினரும் நடிகையுமான பரினீதி சோப்ரா, பிரியங்காவின் தோழி நடிகை ஆலியா பட், திரைக்கதையாசிரியர் முஸ்டாக் சேக், பிரியங்காவின் சகோதரர் சித்தார்த் சோப்ரா உட்பட சிலர் கலந்துகொண்டனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close