[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

“எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம்”- உதயநிதி அறிவுறுத்தல்

udhayanidhi-stalin-advice-to-fans

தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என ரசிகர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின். தயாரிப்பாளரான இவர் படங்களிலும் நடித்து வருகிறார். காமெடி கதையம்சத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படம் ரசிர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும் கூட தற்போது அரசியல் மேடைகளிலும் அவ்வப்போது இவர் தென்படுகிறார். இதன்மூலம் விரைவில் அரசியலுக்குள் அவர் நுழைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் நாளை தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என ரசிர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, உதயநிதி ஸ்டாலினின் தலைமை ரசிகர் மன்றம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில்,  கருணாநிதி மறைவாலும், கஜா புயலால் விவசாயிகள் மீளா துயரத்தில் இருப்பதாலும் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம் இருக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு பதில், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், தமிழகம் முழுவதும் பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நற்பணிகளை செய்ய வேண்டும் என கேட்டக்கொள்ளப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல் பேரில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close