[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாக். டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃபராஸ் நீக்கம்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் லாரி மூலம் விநியோகிக்கப்படும் மெட்ரோ நீரின் விலை அதிகரிப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS அரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு

‘கஜா’நிவாரண நிதிக்கு அஜித் ரூ.15 லட்சம் 

actor-ajith-donates-rs-15-lakhs-to-gaja-affected-areas

‘கஜா’ புயல் நிவாரணமாக முதல்வரின் நிவாரண நிதிக்கு நடிகர் அஜித் ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். 

‘கஜா’ புயலால் நாகை, புதுக்கோட்டை, திருவாரூர்,தஞ்சை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடும் சேதத்திற்கு உள்ளாகின. ஏராளமான பயிர்களும், வீடுகளும், பொருட்களும் சேதம் அடைந்தன. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

முன்னதாக  நடிகர் விஜய்சேதுபதி ரூ.25 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் ஆகியோரும் பொருளாகவும், ரொக்கமாகவும் உதவி அளித்துள்ளனர். சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சத்துக்கு நிவாரணப் பொருட்கள் , ரூ.10 லட்சம் நிதி அளிக்கப்படும் என்று தெரிவித்தார். நடிகர் சிவக்குமார் குடும்பம் சார்பில் நிவாரண நிதியாக ரூ50 லட்சம் அறிவிக்கப்பட்டது.

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் ரூ40 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த், ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பியுள்ளார். நிவாரணப் பொருட்களை தனது மக்கள் மன்றத்தின் மூலம் வழங்க ரஜினிகாந்த் உத்தரவிட்டார்.

இந்நிலையில் ‘கஜா’ புயல் நிவாரணமாக முதல்வரின் நிவாரண நிதிக்கு நடிகர் அஜித் ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். தொழிலதிபர்கள், நடிகர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் நிதியுதவி அளித்து வரும் நிலையில் ‘கஜா’ புயல் நிவாரணமாக முதல்வரின் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.13.32 கோடி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close