[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

“விஜய் சேதுபதியை பெரிய திரையில் பார்க்க ஆசை” - வைரலான கார்த்திக் சுப்புராஜ் பதிவு

director-karthik-subbaraj-s-old-fb-post-going-viral


‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தின் ரிலீசின் போது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட பேஸ்புக் பதிவு தற்போது வைரலாகி வருகிறது

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராகி இருக்கிறார் விஜய் சேதுபதி. மாதத்திற்கு இரண்டு படங்கள் என்பதைக்கூட சர்வசாதாரணமாய் செயல்படுத்தி வருகிறார். விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கின்றன. சமீபத்தில் வெளியான ‘96' திரைப்படத்தில் ராம் என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி வாழ்ந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். சமீபத்தில் வெளியாகியுள்ள ‘சீதக்காதி’ ட்ரைலரும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அய்யா என்ற வயதான தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். ஒரு படத்தின் கதாப்பாத்திரம் மற்றொரு படத்தில் எதிரொலிக்காமல் படத்துக்கு படம் வித்தியாசத்தை கொடுக்கும் விஜய் சேதுபதியை சினிமா ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கின்றனர். 

பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகராக நடித்த விஜய் சேதுபதி, ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் ‘தென்மேற்கு பருவக்காற்று’.தேனி, கம்பம் பகுதி மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் காதல், பாசம், துரோகம் எனப் பல பரிமாணங்கள் இந்தத் திரைப்படத்தில் எதிரொலித்தது. இந்தத் திரைப்படத்தில் கிராமத்து பையனாக நடித்த விஜய் சேதுபதி, தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இந்நிலையில் ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தின் ரிலீசின் போது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட பேஸ்புக் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அதில் நாளை ‘தென்மேற்கு பருவக்காற்று’ வெளியாக உள்ளது. விஜய் சேதுபதியை பெரிய திரையில் பார்க்க ஆர்வமாக உள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார். அந்தப் பதிவிற்கு கமெண்ட் செய்துள்ள ஒருவர் யார் விஜய் சேதுபதி என்று கேள்வி கேட்க விரைவில் அவரை உங்களுக்கு தெரியும் என்று கார்த்திக் சுப்புராஜ் பதிலளித்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜின் உண்மையான பதிவுதானா இது என்பது தெரியாத நிலையில், அந்தப் பதிவை பலரும் ஷேர் செய்து விஜய் சேதுபதியின் வளர்ச்சியை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close