[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

“மீ டூ விவகாரத்தில் ஒருவாரத்தில் முக்கிய முடிவு” - சங்கத் தலைவர் அறிவிப்பு 

iftda-to-take-decision-against-sajid-khan-and-alok-nath-within-a-week

மீ டூ விவகாரத்தில் புகார் அளிக்கப்பட்ட சாஜித் கான், அலோக் நாத் ஆகியோர் மீது ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி இயக்குனர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சினிமா துறையில் மீ டு புகார்கள் தொடர்ந்து வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தின.  தமிழில் பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது புகார் கூறியிருந்தார். இதை அவர் மறுத்தார். இயக்குனர் சுசி கணேசன் மீது லீனா மணிமேகலை, நடிகை அமலா பால் புகார் கூறினர். லீனா மீது சுசிகணேசன் வழக்குத் தொடர்ந்துள்ளார். நடிகை கன்னட நடிகை, நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறினார். இது தொடர்பாக வழக்கும் தொடுக்கப்பட்டது.

அதேபோல் இந்தியில் நடிகர் நானா படேகர், நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யா மீது பரபரப்பு புகார் கூறியிருந்தார் நடிகை ஒருவர். இதையடுத்து அவர்கள் மீது போலீசில் புகாரும் கொடுத்தார் அந்த நடிகை. இதையடுத்து இந்தியில் நடிகை கங்கனா ரனாவ்த்‘குயின்’ இயக்குனர் மீது பாலியல் புகார் கூறியிருந்தார். மேலும் சில இயக்குனர்கள் மீது பாலியல் புகார்கள் தொடர்ந்து வெளியான நிலையில் பரபரப்பு ஏற்பட்டது. 

இதேபோல் ‘ஹவுஸ்ஃபுல் 4’ படத்தின் இயக்குநர் சாஜித் கான் மீது நடிகை ராச்சல் வொயிட், உதவி இயக்குநர் சலோனி சோப்ரா, பத்திரிகையாளர் கரிஷ்மா உபத்யாய் உள்ளிட்டோர் பாலியல் புகார் தெரிவித்தனர். இந்தி நடிகர் அலோக் நாத் மீது பாலியல் வன்கொடுமை புகாரும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இருவர் மீதும் இந்திய திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி இயக்குனர்கள் சங்கம் சார்பில் ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

(சாஜித் கான்)

இது குறித்து பேசிய இந்திய திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி இயக்குனர்கள் சங்கத்தின் தலைவர் அசோக் பண்டித், “இயக்குநர் சாஜித் கான் மீது கொடுக்கப்பட்ட புகாரில் இந்த வாரத்துக்குள் முக்கிய முடிவு எடுக்கப்படும். விரைவில் சங்கம் கூட்டப்பட்டு சாஜித்கான் விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் சாஜித்கான் மீது புகார் தெரிவித்த பெண்களின் தரப்பை விசாரித்துவிட்டோம். தேவைப்படும் போது அவர்கள் வழக்கறிஞர்களுடன் வருவார்கள்” என்று தெரிவித்தார்.

 

(அலோக் நாத்)

அதேபோல் அலோக் நாத் விவகாரம் குறித்து பேசிய அவர்,“அலோக் நாத் மீது கொடுக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை புகாரும் விரைவில் முடித்துவைக்கப்படும். இந்த விவகாரத்தில் அலோக் நாத் விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுக்கிறார். அவர் சங்கங்களை சந்திப்பதை நிராகரிக்கிறார். இது குறித்து அவருக்கு சட்ட ரீதியாகவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வாரத்துக்குள் அலோக் நாத் விவகாரத்திலும் முடிவு எட்டப்படும்” என்று தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close