[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி நாளை சந்திக்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆலோசனை
  • BREAKING-NEWS கேதார்நாத்தில் வழிபட்டதை நான் அதிர்ஷ்டமாக நினைக்கிறேன்; எனக்கும் கேதார்நாத்துக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS சூலூர்: கருமத்தம்பட்டியில் வேறு வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டுவரப்பட்டு தாமதமாக வாக்குப்பதிவு தொடக்கம்; வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறினால் வாக்குப்பதிவு தொடங்காமல் இருந்தது
  • BREAKING-NEWS 7ம் கட்ட மக்களவை தேர்தல் - பீகார் முதல்வர் நிதீஷ் குமார் பாட்னாவில் வாக்களித்தார்
  • BREAKING-NEWS இறுதிக்கட்ட மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் வாக்களித்தார்
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த 7 ஆம் கட்ட வாக்குப்பதிவு 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் நடைபெறுகிறது

டிசம்பரில் ரஜினியின் ‘பேட்ட’ இசை விழா 

petta-audio-lanuch-is-in-december-crew-tweet

டிசம்பர் மாதம் ரஜினியின் ‘பேட்ட’ இசை விழா நடைபெற உள்ளதாக ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ‘பேட்ட’. இப்படத்தில் சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதின் சித்திக், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தற்சயம் படப்பிடிப்பிற்கு பிந்தைய பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. சில வாரங்கள் முன்பு ‘பேட்ட’ படத்தின் தனக்கான படப்பிடிப்பு காட்சிகள் முடிந்தது என ரஜினிகாந்த் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதனை அடுத்து படம் 2019 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என படக்குழு ஏற்கெனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. 

இந்நிலையில் வரும் டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி ‘பேட்ட’ படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெறும் எனப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக சமூக வலைத்தளமான ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். மேலும் டிசம்பர் 3 ஆம் தேதி முதல் பாட்டும் மற்றும் 7 ஆம் தேதி இரண்டாம் பாட்டும் வெளியிடப்படும் எனவும் பதிவிட்டுள்ளனர். அனிருத் இசையில் வெளிவர உள்ள இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளியீட்டு விழாவிற்கான இந்த போஸ்டரை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close