[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
  • BREAKING-NEWS காவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது

“ரஜினி நலமாக உள்ளார்” - செய்தி தொடர்பாளர் விளக்கம்

rajinikanth-health-condition-is-well-spokesperson-ask-to-not-believe-in-fake-news

ரஜினிகாந்த் நலமாக உள்ளார், அவரது உடல்நிலை பற்றி சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்கள் தவறானவை என அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பெரிய எதிர்பார்ப்புகளோடு அடுத்த வாரம் வெளியாக உள்ளது ‘2.0’. ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான ‘எந்திரன்’ வெற்றியை தொடர்ந்து மிக பிரம்மாண்டாக தயாராகியுள்ள இந்தப் படத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஏறகுறைய இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் படத்தின் வருகைக்காக ரஜினியின் ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.

இதனிடையே, கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரஜினி ரசிகர்கள் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தம்முடைய ரசிகர்கள் மூலம் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண உதவிகளை மேற்கொள்ள உள்ளதாக ரஜினி அறிவித்து இருந்தார்.

இந்நிலையில், ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை என சமூக வலைத்தளங்களில் செய்திகள் பகிரப்பட்டு வந்தது. இதனையடுத்து, ரஜினிகாந்த் நலமாக உள்ளார்; அவரது உடல்நிலை பற்றி வெளியாகும் தகவல்கள் தவறானவை என அவரது செய்தி தொடர்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறான செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவிவரும் நிலையில் வதந்திகளை நம்ப வேண்டாம் என ரஜினி மக்கள் மன்றம் தரப்பில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close