[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
  • BREAKING-NEWS காவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

மீ டூ விவகாரம்: நடிகர் மோகன்லாலை சாடிய ரேவதி!

metoo-how-do-we-bring-sensitivity-to-such-people-revathy-asks-mohanlal

மீ டூ விவகாரத்தை ஃபேஷன் என்று குறிப்பிட்ட நடிகர் மோகன்லாலை, நடிகை ரேவதி சாடியுள்ளார்.

சினிமா துறையில் மீ டு புகார்கள் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருந்தன. நடிகர் நானா படேகர், நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யா மீது பரபரப்பு புகார் கூறியிருந்தார் நடிகை ஒருவர். இதையடுத்து அவர்கள் மீது போலீசில் புகாரும் கொடுத்தார் அந்த நடிகை. இதையடுத்து இந்தியில் நடிகை கங்கனா ரனவ்த் குயின் இயக்குனர் மீது பாலியல் புகார் கூறியிருந்தார். மேலும் சில இயக்குனர்கள் மீது பாலியல் புகார்கள் தொடர்ந்து வெளியான நிலையில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து தமிழில் பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது புகார் கூறியிருந்தார். இதை அவர் மறுத்தார். இயக்குனர் சுசி கணேசன் மீது லீனா மணிமேகலை, நடிகை அமலா பால் புகார் கூறினர். லீனா மீது சுசிகணேசன் வழக்குத் தொடர்ந்துள்ளார். நடிகை ஸ்ருதிஹரன், நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறினார். இது தொடர்பாக வழக்கும் தொடுக்கப்பட்டது. 

இவ்வாறு தொடர்ந்து பாலியல் புகார் கூறப்பட்டு வருவது பற்றி, மலையாள நடிகர் சங்கத் தலைவர் மோகன் லாலிடம் கேட்டபோது, ‘இதை ஓர் இயக்கமாகக் கருதமுடியாது. இது ஒரு ஃபேஷன் ட்ரெண்ட்டைப் போன்றது. இந்த ட்ரெண்ட் இன்னும் சில நாள்களுக்கு இருக்கும். பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் எல்லா இடங்களிலும் நடக்கிறது. திரையுலகில் மட்டும் நடப்பது அல்ல. மலையாளத் திரையுலகில் எந்தப் பிரச்னைகளும் இல்லை’ என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு மோகன் லாலில் பெயரை குறிப்பிடாமல் கருத்துத் தெரிவித்துள்ள நடிகை ரேவதி, ‘உணர்வுகளுடன் பேசுவதை சிலருக்கு எப்படி கற்றுக் கொடுப்பது? ஒரு பிரபலமான நடிகர், மீ-டூ என்பது ட்ரெண்ட் என்று சொல்கிறார். இயக்குனர் அஞ்சலி மேனன் (பெங்களூர் டேஸ் இயக்குனர்) சொன்னதை போல, செவ்வாய்க்கிரகத்திலிருந்து சமீபத்தில் வந்தவர்களுக்கு பாலியல் வன்முறைகள் பற்றியும், அத்துமீறல்களை வெளியில் சொல்வதால் ஏற்படும் மாற்றங்களைப் பற்றியும் தெரியாது’ என்று குறிப்பிட்டுள்ளா. இதற்கு சமூக வலைத்தளங்களில் அவருக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. 

நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப்புக்கு ஆதரவாக மலையாள நடிகர் சங்கமான ’அம் மா’ இருப்பதாக புகார் கூறி வருகிறார் ரேவதி. நடிகைகள் பார்வதி, பத்மப்ரியா, ரீமா கல்லிங்கல் உள்ளிட்டோருடன் அவர் ஆரம்பித்துள்ள திரைப் பட பெண்கள் கூட்டமைப்பு, மோகன்லால் மீதும் நடிகர் சங்கம் மீதும் தொடர்ந்து புகார் கூறி வரும் நிலையில் இப்போது இந்தக் கருத் தைத் தெரிவித்துள்ளார் ரேவதி. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close