[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

மும்பை திரும்பியது நடிகர் ரன்வீர்- நடிகை தீபிகா ஜோடி

newly-weds-deepika-padukone-ranveer-singh-arrive-in-mumbai

திருமணத்துக்குப் பிறகு நடிகர் ரன்வீர் சிங்- தீபிகா படுகோன் ஜோடி இன்று மும்பைக்கு திரும்பியது.

இந்தி நடிகை தீபிகா படுகோனும், இந்தி ஹீரோ ரன்வீர் சிங்கும் காதலித்து வந்தனர். இருவரும் விழாக்கள் மற்றும் விருந்து நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாகச் சென்று வந்தனர். இருந்தாலும் தங்கள் காதல் பற்றி வாய் திறக்காமல் தவிர்த்து வந்தனர்.


இந்நிலையில் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதை உறுதிப்படுத்தும் விதத்தில் தீபிகாவும் ரன்வீரும் தங்கள் திருமண தேதியை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். 

அதில், ’எங்கள் திருமணம் 2018, நவம்பர் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இத்தனை ஆண்டுகளாக எங்கள் மீது காட்டிய உங்கள் அன்புக்கு நன்றி. எங்களின் வாழ்க்கை பயணம் அன்பாகவும், நட்புடனும், ஒற்றுமையுடன் செல்ல உங்கள் ஆசியை வேண்டுகிறோம். அன்புடன் தீபிகா, ரன்வீர்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன்படி தீபிகா - ரன்வீர் திருமண நிகழ்ச்சிகள் இத்தாலியின் லோக் கோமா பகுதியில் உள்ள காஸ்டாதிவா ரிசாட் மற்றும் வில்லா தி எஸ்ட் ஆகிய இரண்டு இடங்களில் நடைபெற்றது. திருமண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் இருவரும் வெளியிட்டனர். 

இந்த திருமணத்துக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close