[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார் சின்மயி !

singer-chinmayi-axed-from-tamil-film-dubbing-association

பாடலாசிரியர் வைரமுத்து மீது #Metoo ஹேஷ்டேக் மூலம் பாடகி சின்மயி சமீபத்தில் பாலியல் துன்புறுத்தல் புகாரை முன்வைத்திருந்தார். சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வைரமுத்து தன்னை பாலியல் ரீதியாக அணுகியதாக அவர் குற்றஞ்சாட்டினார். இதனையடுத்து சின்மயிக்கு ஆதராகவும், எதிர்ப்பாகவும் ஒருசேர குரல்கள் எழுந்தன. சின்மயி வீடியோ ஆதாரத்தை வெளியிடலாமே என சிலர் சொல்ல, செல்லும் இடங்களுக்கெல்லாம் கேமராவுடனா..? செல்ல முடியும் என சின்மயி எதிர்கேள்வி எழுப்பினார்.  

வைரமுத்துவோ, சின்மயி வழக்கு தொடரட்டும். நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார் என தெரிவித்துவிட்டார். ‘நான் நல்லவனா..? இல்லை கெட்டவனா..? என்பதை இப்போதே முடிவு செய்ய வேண்டாம். நீதிமன்றம் சொல்லட்டும்’எனவும் வீடியோ மூலம் தன் பங்கு விளக்கத்தை கொடுத்திருக்கிருந்தார் வைரமுத்து. இதனையடுத்து திரையுலகிலும், ஊடகத் துறையிலும் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

சின்மயி பாடகி மட்டுமல்ல ஒரு திறமையான டப்பிங் கலைஞரும் கூட. அண்மையில் வெளியாகி பரவலான கவனம் பெற்ற "96" படத்தில் நடிகை த்ரிஷாவுக்கு பின்னணி குரல் கொடுத்தவர் சின்மயிதான். பல முன்னணி நடிகைகளுக்கும் பல ஆண்டுகளாக குரல் கொடுத்து வந்தார் சின்மயி. ஆனால், தான் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து நீக்கிவிட்டதாக சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சின்மயி " டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து என்னை நீக்கிவிட்டார்கள். என் நீக்கம் குறித்து எந்த தகவலும் சங்கத்தில் இருந்து வரவில்லை. எனக்கு எவ்வித முன்னறவிப்பும் கொடுக்கப்படவில்லை. இதனால் இனியும் என்னால் தமிழ் படங்களுக்கு பின்னணி குரல் கொடுக்க முடியாது. நான் சங்கத்துக்கு இரண்டு ஆண்டுகளாக சந்தா கட்டவில்லை அதனால் என்னை நீக்கிவிட்டதாக காரணம் தெரிவிக்கிறார்கள். சந்தா கட்டாதது குறித்தும் எனக்கு முன் அறிவிப்புகள் வரவில்லை. என்னால் மீண்டும் டப்பிங் சங்க உறுப்பினராக முடியுமா என தெரியவில்லை" என பதிவிட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close