[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

பிரியங்கா திருமணத்துக்கான அரண்மனை வாடகை இவ்வளவா?

here-s-how-expensive-priyanka-and-nick-jonas-wedding-palace-is

நடிகை பிரியங்கா சோப்ரா- ஹாலிவுட் நடிகர் மற்றும் பாடகர் நிக் ஜோனாஸ் திருமணம் நடக்க இருக்கும் ஜோத்பூர் அரண்மனையின் ஒரு நாள் வாடகைத் தொகை தெரிய வந்துள்ளது. 

தமிழில், விஜய்யின் ’தமிழன்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. பின்னர் இந்தியில் நடித்த அவர், முன்னணி நடிகையானார். இப்போது ஹாலிவுட் படங்களிலும் தொடர்களிலும் நடித்து வருகிறார்.

Read Also -> விஹாரி, படேல் மிரட்டல்: முரளி விஜய், ரஹானே மீண்டும் ஏமாற்றம்! 

இந்நிலையில் தன்னை விட பத்து வயது குறைந்த ஹாலிவுட் பாப் பாடகரும் நடிகருமான நிக் ஜோனாஸை அவர் காதலித்தார். இவர்களின் நிச்சயதார்த்தம் ஜூலை மாதம் முடிந்துவிட்டது. நிச்சயதார்த்தத்துக்கு லண்டனில் உள்ள பிரபலமான நகைக்கடையில் நிக், 2 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பில் மோதிரம் வாங்கியதாகக் கூறப்பட்டது.

இவர்களது நிச்சயதார்த்த விருந்து மும்பை ஜுஹூவில் உள்ள பிரியங்கா சோப்ராவின் வீட்டில் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். அங்கு சிறப்பு பூஜையும் நடந்தப்பட்டது.

Read Also -> எதிர்ப்பை மீறி டி.எம்.கிருஷ்ணா இசை நிகழ்ச்சி இன்று நடக்கிறது!

 இந்நிலையில் இவர்கள் திருமணம் ஜோத்பூரில் டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி நடக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த மாதம் பிரியங்காவும் நிக் ஜோனாஸும் ஜோத்பூர் சென்று திருமணம் செய்துகொள்ள இருக்கும் உமைத் பவன் அரண்மனையை (Umaid Bhawan Palace)  பார்வையிட் டனர்.

இந்நிலையில், திருமணத்துக்கு முன்பாக, அதை அமெரிக்காவில் பதிவு செய்வதற்கான பணிகளில் நிக் ஜோனாஸும் பிரியங்கா சோப்ராவும் ஈடுபட்டுள்ளனர். கலிபோர்னியாவில் உள்ள பெவரிலி ஹில்ஸ் பகுதி நீதிமன்றத்தில் திருமண உரிம சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப் பங்களை இருவரும் சமர்ப்பித்துள்ளனர். இந்த உரிமச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டு இருவரும் இந்தியா வர இருக்கின்றனர். இதையடுத்து திருமணத்தை இரண்டு நாடுகளிலும் பதிவு செய்வதற்கான முயற்சியில் அவர்கள் இறங்கியுள்ளனர்.

Read Also -> “சிஎன்என் செய்தியாளரை அனுமதியுங்கள்” - அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

இதற்கிடையே இவர்கள் திருமணம் நடைபெறும் ஜோத்பூர் உமைத் பவன் அரண்மனை (Umaid Bhawan Palace) யின் ஒரு நாள் வாடகை என்ன என்பது இப்போது தெரிய வந்துள்ளது. அதாவது, 60 ஆயிரம் அமெரிக்க டாலர் என்று கூறப்படுகிறது. இதன் இந்திய மதிப்பு ரூ.43 லட்சம்! இந்த அரண்மனையில் 347 அறைகள் உள்ளன. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close