[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

களைகட்டிய பொங்கல் ரேஸ்! ‘தல’யுடன் மோதும் தலைவர்!

rajinikanth-s-petta-will-be-released-on-pongal

ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட திரைப்படம் 2019 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ‘பேட்ட’. இப்படத்தில் சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதின் சித்திக், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘பேட்ட’ படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இணையத்தில் கசிந்து அவ்வப்போது வைரலானது. இந்நிலையில் இத்திரைப்படத்தில் ரஜினியின் இரு மாதிரியான ஃபர்ஸ்ட் லுக்குகள் வெளியிடப்பட்டன. இது சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில் ‘பேட்ட’படத்தின் தனக்கான காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்தது என்றும், 15 நாட்கள் முன்னதாகவே தனது படப்பிடிப்பு முடித்ததில் மகிழ்ச்சி என்றும் பதிவிட்டு படக்குழுவை பாராட்டினார் ரஜினிகாந்த். இந்நிலையில் படப்பிடிப்பிற்கான பிந்தைய பணிகள் துரிதமாக நடந்து வரும் நிலையில் படம் 2019 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ரஜினியும், சிம்ரனும் நடந்து வருவது போன்ற போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ள படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் ''தலைவரின் பேட்ட 2019 பொங்கலுக்கு'' என பதிவிட்டுள்ளார். இந்த போஸ்டரை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். போஸ்டர் வெளியிடப்பட்டு 30 நிமிடங்களில் இந்திய அளவில்  #petta என்ற ஹேஸ்டேக் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தது.

இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து இருக்கும் விஸ்வாசம் திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.  இரண்டு பெரிய நடிகர்களின் திரைப்படம் வெளியாக உள்ளதால் வரும் பொங்கல் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பெரிய கொண்டாட்டமாக இருக்கப்போகிறது என்பதில் மாற்றம் இல்லை.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close