[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

‘2.0’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ் 

censor-board-approved-u-a-certificate-for-2-0

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியாக உள்ள  ‘2.0’ படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. 

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம்  ‘2.0’ பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன்பு சென்னையில் வெளியிடப்பட்டது. 

இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், எமிஜாக்சன், ஏ.ஆர்.ரஹ்மான், அக்ஷய்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டர். இதில் பேசிய ஷங்கர், ரூ.543 கோடியில் உருவாக்கியுள்ள 2.0 படத்தில் 4கே தொழில்நுட்பம் கொண்ட ஒலி உலகத்திலேயே முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். 

இப்படம் நவம்பர் 29 ஆம் தேதி திரையில் வெளியாக உள்ளது. இப்படம் அமெரிக்காவில் இதுவரை இந்திய சினிமாவில் இல்லாத அளவிற்கு அந்தப் பகுதியில் அதிக திரையரங்கில் வெளியாக உள்ளது. 

இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் உருவாகியிருக்கும்  ‘2.0’ படத்தை விரைவில் இணையத்தில் வெளியிடுவோம் என்று ட்விட்டர் பக்கத்தில் தமிழ் ராக்கர்ஸ் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்,  ‘2.0’ படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close