[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
  • BREAKING-NEWS காவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

 “வேலை வேறு, பேஷன் வேறு” - செய்து காட்டும் அஜித்!

exclusive-pics-of-ajith-at-mit-college


‘விஸ்வாசம்’ படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் மீண்டும் ‘தக்‌ஷா’ குழுவுடன் இணைந்துள்ளார் நடிகர் அஜித்குமார்.

தான் ஒரு நடிகர் என்றாலும் கார் ரேஸ், மெக்கானிக், போட்டோகிராபி, ஏரோ மாடலிங் தயாரிப்பு, சமையல் என அனைத்து துறைகளிலும் கலக்கி வருபவர் நடிகர் அஜித்குமார். பல ஆண்டுகளாக ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஏரோ மாடலிங் செய்து வந்த அஜித் எம்.ஐ.டி-ல் உள்ள ‘தக்‌ஷா’ என்ற மாணவர்கள் அணியுடன் இணைந்து பணியாற்றினார். 

அதன்படி அதிக நேரம் வானில் பறக்கக்கூடிய ஆளில்லா விமானத்திற்கான போட்டியில் கல்லூரி அளவில் அஜித்தின் ‘தக்‌ஷா’ அணி முதல் இடத்தைப் பிடித்தது. பின்னர் ஆஸ்திரேலியாவில் நடந்த UAE மெடிக்கல் எக்ஸ்பிரஸ் சேலன்ஞ் போட்டிக்கு தகுதிபெற்றது. 

அதில் ‘தக்‌ஷா குழு’ இரண்டாம் இடத்தை பிடித்தது. அஜித்தின் அணி உலக அளவில் நடந்த போட்டியில் வெற்றி பெற்றதை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி தீர்த்தனர். இந்நிலையில் ‘விஸ்வாசம்’ திரைப்படத்திலும் அஜித் நடித்து வந்தார். மதுரை மற்றும் தேனியைப் பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் காட்சிகளை, ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் வைத்து படமாக்கப்பட்டது. இதனையடுத்து படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் அஜித் தனது காட்சிகளுக்கான டப்பிங் முழுவதையும் முடித்து கொடுத்தார். 

இந்நிலையில் படத்தின் அனைத்து வேலைகளையும் முடித்து கொடுத்த அஜித், தனது பழைய கெட்அப்புக்கு மாறி சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய கையோடு எம்ஐடி கல்லூரியில் மீண்டும் ‘தக்‌ஷா குழு’வுடன் இணைந்துள்ளார் நடிகர் அஜித்குமார். இன்று அவர் எம்ஐடி கல்லூரியில் அஜித் ஆளில்லா குட்டி விமாத்தை பறக்கவிடும் வீடியோவையும், புகைப்படங்களையும் அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். வேலை என்பது வேறு, பேஷன் என்பது வேறு. இரண்டுக்கும் சரியாக இடம் கொடுத்து வருகிறார் நடிகர் அஜித்குமார் என்று அவரது ரசிகர்கள் அஜித்தின் புகைப்படங்களை பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.


 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close