[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

நடிகை சிரிண்டா இரண்டாவது திருமணம்: இயக்குனரை மணந்தார்!

actress-srinda-ties-the-knot

நடிகை சிரிண்டா மலையாள இயக்குனர் சிஜூ எஸ் பாவாவை இரண்டாவதாக நேற்று திருமணம் செய்துகொண்டார்.

தமிழில், மிர்ச்சி செந்தில், விஜயலட்சுமி நடித்த ’வெண்நிலா வீடு’ என்ற படத்தில் நடித்தவர் மலையாள நடிகை சிரிண்டா. இவர் மலையாள த்தில் ஃபோர் பிரண்ட்ஸ், 22 பீமேல் கோட்டயம், அன்னயும் ரசூலும் ஷெர்லாக் டோம்ஸ் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் தனது 19 வது வயதில் அஷப் என்பவரை திருமணம் செய்தார். பின்னர் நான்கு வருடங்களில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார். 

விவாகரத்து பெற்ற இவருக்கு அர்ஹான் என்ற மகன் உள்ளார். சிரிண்டா இயக்குனர் சிஜூ எஸ் பாவாவை காதலித்து வந்தார். சிஜூ, பஹத் பாசில், இஷா தல்வார் நடித்த ’நலே’ என்ற படத்தை இயக்கியவர்.

இந்நிலையில் இவர்கள் காதலுக்கு இரண்டு பேர் குடும்பமும் சம்மதித்ததை அடுத்து நேற்று திருமணம் செய்துகொண்டனர். இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டனர். இவர்களின் திருமண புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு நடிகை நமீதா பிரமோத் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close