[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிகில் திரைப்பட வெளியீட்டிற்கு தடை கோரிய வழக்கு. இன்று உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

“தோனி நாடாளுவதை காண காத்திருக்கிறேன்” - விக்னேஷ் சிவனின் கனவு

vignesh-shivan-said-waiting-for-dhoni-lead-the-country-one-day

கிரிக்கெட் வீரர் தோனி ஒரு நாள் நாட்டை ஆளுவதை காண காத்திருப்பதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் ‘நானும் ரவுடி தான்’, ‘தானா சேர்ந்த கூட்டம்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இதற்கெல்லாம் மேலாக அவர் நடிகை நயன்தாராவின் காதலன். இவர் நீண்ட நாட்களாக தோனியை நேரில் சந்திக்க வேண்டும், அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருந்தார். இந்நிலையில் இவர் தோனியை நேரில் சந்தித்து அவருடன் புகைப்படமும் எடுத்துள்ளார்.

அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள விக்னேஷ், “தோனியை சந்திக்க வேண்டியது எனது வாழ்நாள் கனவு. மகிழ்ச்சியான தருணம். வாழ்வில் மிக திருப்திகரமான நாள். இந்த சந்தர்பத்தை கொடுத்த கடவுளுக்கு நன்றி. தோனி நாட்டை ஆளும் அந்த ஒரு நாளை காண காத்திருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார். அத்துடன் இது தனது கனவு எனவும் அவர் ஹேஷ்டேக் மூலம் தெரிவித்துள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close