[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய அரசு நல்லது செய்தால் அதை ஆதரிப்போம்; மக்களுக்கு எதிராக எது இருந்தாலும் அதை எதிர்ப்போம் - அமைச்சர் காமராஜ்
  • BREAKING-NEWS மேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு முறை அமல்படுத்தப்படாது; இதற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் - முதல்வர் மம்தா பானர்ஜி
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலினை சந்தித்து தனக்கு வழங்கப்பட்ட சிறந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான விருதை காண்பித்து வாழ்த்துப்பெற்றார் திருச்சி சிவா
  • BREAKING-NEWS எனது விளக்கத்தை ஏற்று என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பிய கமலுக்கு நன்றி - ராகவா லாரன்ஸ்
  • BREAKING-NEWS என் பெயர் ராகுல் காந்தி; ராகுல் சவார்கர் அல்ல; உண்மையை பேசியதற்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன் - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS நாட்டுக்காக மக்கள் குரல் எழுப்பாமல் அமைதியாக இருந்தால் அரசியலமைப்பு அழிக்கப்படும் - பிரியங்கா காந்தி
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 20ஆம் தேதிக்கு பின் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

ராஜமவுலியின் ’ஆர்ஆர்ஆர்’ ஷூட்டிங் தொடங்கியது!

chiranjeevi-launches-rajamouli-jr-ntr-and-ram-charan-film-rrr

இயக்குனர் ராஜமவுலி இயக்கும் அடுத்த படத்துக்கான தொடக்க விழா ஐதராபாத்தில் இன்று தொடங்கியது. நடிகர் சிரஞ்சீவி கிளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடக்கி வைத்தார்.

பிரபல இயக்குனர் ராஜமவுலி, பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களுக்கு பிறகு இந்தியா முழுவதும் பிரபலமானார். சூப்பர் டூப்பர் ஹிட்டான ‘பாகுபலி’ படங்கள் சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் வரவேற்பை பெற்றது. இதில் நடித்த பிரபாஸ், ராணா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் ஆகியோருக்கும் இந்தியா முழுவதும் வரவேற்பு கிடைத்தது.

இந்தப் படம் காரணமாக இப்போது மூன்று மொழிகளில் நடிக்கும் ஹீரோவாக உயர்ந்திருக்கிறார் பிரபாஸ். அவர் நடிக்கும் ’சாஹோ’ படம் மெகா பட்ஜெட்டில் இந்தி, தெலுங்கு, தமிழ் மொழிகளில் உருவாகிறது. ராணா ஏற்கனவே இந்தி படங்களில் நடித்துவருகிறார்.

இந்நிலையில் ராஜமவுலி அடுத்து என்ன படத்தை இயக்க போகிறார் என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக பல்வேறு வதந்திகளும் வெளியாயின. வழக்கமாக ராஜமவுலி படங்களுக்கு கதை எழுதும் அவரது தந்தை விஜயேந்திர பிரசாத், ‘அடுத்த படத்தில் 2 ஹீரோ நடிக்கின்ற னர். கதை தயாராகிவிட்டது. ஃபைனல் டச்சில் ராஜமவுலி இருக்கிறார். ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் தேஜா ஹீரோக்களாக நடிக்கின்றனர்’ என்று கூறியிருந்தார்.

பின்னர் இதை ராஜமவுலியும் உறுதிப்படுத்தி இருந்தார். இரண்டு ஹீரோக்களோடு தான் இருக்கும் புகைப்படத்தையும் ’ஆர் ஆர் ஆர்’ என்ற தலைப்பையும் அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்தப் படம் எப்போது தொடங்கும் என்று எல்லோரும் எதிர்பார்த்துகொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று காலை (11 வது மாதம் 11 ஆம் தேதி 11 மணிக்கு) இதன் பூஜை நடந்தது. பிரபல தெலுங்கு ஹீரோவும் அரசியல்வாதியுமான சிரஞ்சிவி, கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். 

தயாரிப்பாளர் கே.ராகவேந்திர ராவ், படத்தின் ஹீரோக்களான ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் தேஜா, பிரபாஸ், ராணா, பிரணிதா, இயக்குனர் வி.வி.விநாயக், இந்தப் படத்தை தயாரிக்கும் டிவிவி தனய்யா, இசை அமைப்பாளர் கீரவாணி உட்பட பலர் கலந்துகொண்டனர். 

‘ஆர் ஆர் ஆர்’ என்கிற டைட்டில் தற்காலிகமானதுதான். வொர்க்கிங் டைட்டிலாக வைத்திருக்கிறோம். ஷூட்டிங் முடியும்போது வேறு டைட்டில் வைக்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close