[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
  • BREAKING-NEWS காவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

'கல்யாணமெல்லாம் இல்லை ரொமான்ஸ் மட்டுமே' சுஷ்மிதா சென் ட்வீட் !

sushmita-sen-responds-to-wedding-rumours

தன்னை விட 16 வயது குறைந்த காதலருடன் நடிகை சுஷ்மிதா சென் அடுத்த வருடம் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் செய்திகள் வந்த நிலையில் நடிகை சுஷ்மிதா சென் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அதில் இப்போதைக்கு கல்யாணம் இல்லை என்றும் தான் இப்போது ரொமான்ஸ் வாழ்கையை அனுபவித்துக் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரபல இந்தி நடிகை சுஷ்மிதா சென். இவர் தமிழில், நாகார்ஜுனா ஜோடியாக ’ரட்சகன்’ படத்தில் நடித்திருந்தார். பிறகு ‘முதல்வன்’ படத்தில் ‘சக்கலக்க பேபி’ பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். ஐதராபாத்தில் பிறந்த இவர், இந்தியாவின் சார்பில் முதன் முதலாக பிரபஞ்ச அழகி படத்தை வென்றவர்.  அவருக்கு இப்போது 42 வயது ஆகிறது. இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ரெனீ, அலிசா என்ற இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

சுஷ்மிதா, சில சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்களுடன் கிசுகிசுக்கப்பட்டவர். நட்சத்திர ஓட்டல் அதிபர் ஒருவருடன் அவருக்கு காதல் மலர்ந்து அவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்பட்டது. பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இந்நிலையில் சுஷ்மிதா சென் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த ரோமன் ஷால் (Rohman Shawl) என்ற 27 வயது மாடலை காதலித்து வருகிறார். முதலில் கிசு கிசுவாக பரவிய இந்த தகவலை பின்னர் சுஷ்மிதாவே உறுதிப்படுத்தினார்.

இருவரும் தாஜ்மஹாலுக்கு ஜோடியாக சென்று எடுத்துக்கொண்ட படத்தை சுஷ்மிதா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து காதலை உறுதிப்படுத்தி இருந்தார். படத்தின் கீழே, எனது வாழ்க்கையின் காதல் என்று குறிப்பிட்டிருந்தார். இவருக்கும் ரோமனுக்கும் 16 வயது வித்தியாசம் இருந்தாலும் இவர்கள், இப்போது திருமணத்துக்கு தயாராகி விட்டனர். இருவரும் அடுத்த வருடம் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.இதுபற்றி மும்பை பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், ‘விரைவில் திருமணம் செய்துகொள்ளலாம் என்று சுஷ்மிதாவிடன் கேட்டுள்ளார் ரோமன். சுஷ்மிதாவும் அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். அடுத்த வருடம் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இதற்கு அவரது வளர்ப்பு மகள்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு அதில் பதிவிட்டுருந்த சுஷ்மிதா சென் " இந்த உலகம் என்னுடைய கல்யாண செய்தியை எதிர்பார்க்கிறது. ஆனால் எனக்கு விளையாட்டு மிகவும் பிடிக்கும். என்னைப் பற்றிய வதந்திகள் இறந்து போகும். ஏனென்றால் இப்போதைக்கு நான் திருமணம் செய்யவில்லை. இப்போது நான் ரோமனுடன் ரொமான்ஸில் மட்டுமே இருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close