[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு

திருமணத்துக்காக இத்தாலி சென்ற ரன்வீர், தீபிகா ஜோடி!

deepika-and-ranveer-singh-leave-for-their-wedding

தங்கள் திருமணத்தை முன்னிட்டு, இந்தி நடிகர் ரன்வீர் சிங்கும், நடிகை தீபிகா படுகோனும் நேற்று இரவு இத்தாலி புறப்பட்டுச் சென்றனர். 

தமிழில் ’கோச்சடையான்’ படத்தில் நடித்தவர் இந்தி நடிகை தீபிகா படுகோன். அங்கு முன்னணி நடிகையாக இருக்கும் அவரும் பிரபல இந்தி பட ஹீரோ ரன்பீர் சிங்கும் காதலித்து வந்தனர். இருவரும் விழாக்கள் மற்றும் விருந்து நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாகச் சென்று வந்தனர். இவர்கள் பற்றிய காதல் செய்திகள் வெளியானபோதும் அதுபற்றி வாய் திறக்காமல் இருந்தனர்.

இந்நிலையில் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி தங்கள் திருமண தேதியை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். அதில், ’எங்கள் திருமணம் 2018, நவம்பர் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இத்தனை ஆண்டுகளாக எங்கள் மீது காட்டிய உங்கள் அன்புக்கு நன்றி. எங்களின் வாழ்க்கை பயணம் அன்பாகவும், நட்புடனும், ஒற்றுமையுடன் செல்ல உங்கள் ஆசியை வேண்டுகிறோம். அன்புடன் தீபிகா, ரன்வீர்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இருவரின் திருமணமும் இந்து முறைப்படி நடக்கும். மிகவும் முக்கியமானவர்கள் மட்டுமே திருமணத்துக்கு அழைக்கப்படுவர். இத்தாலியில் உள்ள லேக் கோமோவில் 4 நாட்கள் வரை திருமண நிகழ்ச்சிகள் இருக்கும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் திருமணத்துக்கு முந்தைய சிறப்பு பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் பெங்களூரில் உள்ள தீபிகாவின் வீட்டில் தொடங்கியது. இதில் அவருக்கு வேண்டிய, நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர்.

திருமணத்துக்கான நாள் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், இருவரும் நேற்று மும்பையில் இருந்து இத்தாலி புறப்பட்டுச் சென்றனர். மும்பை விமான நிலையத்தில் கூடியிருந்த மீடியாவினருக்கு வழக்கமாக போஸ் கொடுக்காத இவர்கள், நேற்று உற்சாகமாக போஸ் கொடுத்தபடி சென்றனர். இதில் ரன்வீர் சிங்கிம் அம்மா, அப்பா, தங்கையும் ஆகியோரும் சென்றனர்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close